நினைப்பும் காரியசித்தியும்.
யாவது ஹிம்சிக்கப்படுகிறவனையாவது சேர்ந்தவன் அல்லன்; அவன் சுயாதீனன்.
ஒருவன் தனது நினைப்புக்களை; மேம்படுத்தினால் மாத்திரமே உயர்வும் வெற்றியும் காரியசித்தியும் பெறுதல் கூடும். தனது நினைப்புக்களை மேம்படுத்தாது பின்னிட்டால், அவன் பலஹீனமும் கீழ்மையும் தரித்திரமும் உற்றேயிருப்பான்.
லௌகீக காரியங்களிலும் கூட ஏதாவது சித்தி பெறுவதானால், ஒருவன் தனது நினைப்புக்களைச் சிற்றின்ப இச்சைகளில் அமிழ்த்தாமல் உயர்த்தல் வேண்டும். அவன் காரியசித்தி பெறுதற்குத் தனது சிற்றின்ப இச்சைகளையும் சுயநயத்தையும் பூரணமாக ஒழித்துவிடுதல் வேண்டா: அதில் ஒரு கூறாயினும் ஒழித்தல் வேண்டும். சிற்றின்ப இச்சையே முதன்மையான நினைப்பாகக் கொண்டுள்ளவன் தெளிவாக நினைப்பதும் ஒழுங்காகக் காரியங்களை வரையறுப்பதும் முடியா; அவன், தன்னுள் மறைந்துகிடக்கும் சக்தியைக் கண்டறிந்து அதை விர்த்திசெய்ய முடியாமல், தான் எடுத்த எந்த வேலையிலும் தவறுவான். தனது நினைப்புக்களை ஆண்மையுடன் அடக்கியாள ஆரம்பிக்காததால், அவன் தனது காரியாதிகளை அடிப்படுத்தி நிர்வகிக்கத்தக்க நிலைமையில் இல்லை. அவன் சுயாதீனமாக ஒன்று செய்யவும் சார்பில்லாமல் நிற்கவும் தகுதியில்லாதவன். அவன் கொள்கிற நினைப்புக்களே அவனுடைய சக்திக் குறைவிற்குக் காரணம்.
53