பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனம் போல வாழ்வு.

அபிவிர்த்தியாவது காரியசித்தியாவது கஷ்டப்பட்டாலன்றி உண்டாகாது. ஒருவன் தனது குழப்பமான சிற்றின்ப நினைப்புக்களை ஒழித்துத் தனது ஆலோசனையை வளர்ப்பதிலும் தனது தீர்மானத்தையும் சுயநம்பிக்கையையும் பலப்படுத்துவதிலும் எவ் வளவுக்குத் தன் மனத்தைச் செலுத்துகிறானோ, அவ்வளவுக்கு லௌகிகத்தில் காரியசித்தி உண்டாகும். அவன் தனது நினைப்புக்களை எவ்வளவு அதிகமாக மேம்படுத்துகிறானோ, அவ்வளவு அதிகமாக ஆண்மையும் யதார்த்தமும் ஒழுக்கமும்உள்ளவனா மேம்படுகிறதும் தவிர, அவனது காரியசித்திகளும் அதிகமாகின்றன. அவன் செய்துமுடித்த காரியங்களும் அதிக இன்பம் தருவனவாய் நீடித்திருப்பனலாகும்.

பிரபஞ்சம், பேராசைக்காரனுக்கும் அயோக்கி யனுக்கும் தீயவனுக்கும் அநுகூலம் செய்வதுபோல வெளிப்பார்வைக்குத் தோன்றினும், உண்மையில் அநுகூலம் செய்வதில்லை; அது யோக்கியனுக்கும் பெருந் தகையனுக்கும் நல்லவனுக்கும் உதவிசெய்கிறது. முற்காலத்துப் பெரிய ஆசிரியர் எல்லோரும் இவ்விஷ யத்தை வெவ்வேறு விதமாக வெளியிட்டிருக்கின்றனர். இதனை அறிந்துகொள்ளவும் மற்றவர்களுக் குத் திருட்டாந்தப்படுத்திக் காட்டவும் வேண்டினால், ஒருவன் நாளுக்குநாள் தனது நினைப்புக்களை மேம்

54