பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனக்காட்சிகளும் இலக்ஷியங்களும்

மனக்காட்சியாளர் உலகத்தின் இரக்ஷகர் ஆவார். மனக்காட்சியாவது விழித்துக்கொண்டு பல நல்ல காரியங்களை நினைத்துக் கண்டுகொண்டிருத்தல். ஸ்தூல உலகம் சூக்க்ஷ்ம உலகத்தை ஆதாரமாகக் கொண்டிருத்தல் போன்று, மனிதர் பாவங்களையும் இழிவான செயல்களையும் செய்யும்போதும்,கஷ்டங்களை அநுப விக்கும்போதும், தம்மைச் சேர்ந்த மனக்காட்சியாளருடைய அழகிய மனக்காட்சிகளால் போஷிக்கப்படு கின்றனர். மனித சமூகம் தனது மனக்காட்சியாளரை மறத்தல் முடியாது; அஃது அவருடைய மனோலக்ஷியங்கள் மங்கிப்போகவும் அழிந்துபோகவும் விடுதல் முடியாது; அஃது அம்மனோலக்ஷியங்களில் வாழ்கின்றது; அவை ஒருகாலத்தில் பிரத்தியக்ஷத்தில் காணவும் அறியவும் தக்க உண்மைகள் என்று அஃது அறியும்.

இசைவாணரும்,சித்திரவோடாவிகளும், ஓவியரும், கவிவாணரும், சமயாசாரியர்களும், சாதுக்களுமே மறு உலகத்தைக் கட்டுகிறவர்கள், மோக்ஷஉலகை நிருமிப்பவர்கள். அவர்கள் வாழ்ந்திருந்ததனாலேயே இவ் வுலகம் செவ்விபெற்றிருக்கின்றது. அவர்கள் இல்லாத பக்ஷத்தில் உழைத்துவருந்தும் மனிதசமூகம் அழிந்து போயிருக்கும்.

எவன் தன் ஹிருதயத்தில் ஓர் உயர்ந்த லக்ஷியமாகிய காட்சியைப் பேணிவருகிறானோ, அவன் அதனை

57