பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மனம் போல வாழ்வு.

வைக்கலா மென்றும் உணர்கிறார்கள். ஒருவன் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக அமைதியுள்ளவனாகிறானோ, அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய காரியசித்தியும் செல்வாக்கும் நன்மைசெய்யும் சக்தியும் அதி கரிக்கின்றன. ஒரு சாதாரண வியாபாரியும், தன்னடக்கத்தையும் சாந்தத்தையும் விர்த்திசெய்து வந்தால், அவனுடைய வியாபாரம் விர்த்தியாவதைக் காண்பான்; ஏனெனில், மிகவும் சாந்தமான ஒழுக்கமுள்ள வனிடத்தில் கொடுக்கல்வாங்கல் செய்யவே ஜனங்கள் பிரியப்படுவது சகஜம்.

திடமும் அமைதியு முள்ளவனிடத்தில் எல்லோ ரும் எப்பொழுதும் நேசமும் மதிப்பும் பாராட்டுவார்கள். அவன் பாலைவனத்தில் நிழல்தரும் மரத்தை ஒத்தவன். அமைதியான மனத்தையும் இனிமையான வாக்கையும் நிதானமான வாழ்க்கையையும் விரும்பாதவர் எவர்? இந்நற்குணங்கள் வாய்ந்தவர்களுக்கு மழை பெய்தாலும், வெய்யில் காய்ந்தாலும், வேறு எவ்வித மாறுதல்கள் உண்டானாலும் ஒன்றுமில்லை; ஏனெனில், அவர்களிடத்தில் இனிமையும் நிதானமும் சாந்தியும் எக்காலத்தும் உண்டு. நாம் நிதான மென்று சொல்லும் ஒழுக்கமானது மனோவிர்த்தியின் முடிவான பாடமாகும். வாழ்க்கையின் மலரும், ஆன்மாவின் கனியும் அதுவே. அது ஞானத்தைப்போல அரியது; தங்கத் தினும் — ஆம், பத்தரைமாற்றுத் தங்கத்தினும் —அதிகமாகவிரும்பத்தக்கது. உண்மைக் கடலில் எதற்

66