பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாந்தி.

கும் சலிக்காமல் வாழும் நிதான வாழ்க்கையோடு வெறும் தனார்ச்சிதத்தை ஒப்பிட்டுப்பார்த்தால், தனார்ச்சிதம் எவ்வளவு அற்பமாய்த் தோற்றுகின்றது.

'நாம் தினந்தோறும் காண்கின்ற மனிதரில் எத்தனை பேர் தமது அருமையான உயிர்களை வருத்துகின்றனர்? கடுகடுத்த முகமும் வெடுவெடுத்த பேச்சும் கொண்டிருக்கின்றனர்? நட்பை விடுத்துப் பகையை ஆக்குகின்றனர்? நிதானமான ஒழுக்கத்தை விடுத்து நீங்காத துன்பத்தை அடைகின்றனர்? தம்மை அடக்கும் சக்தி இல்லாமல் தமது வாழ்நாள்களை நாசமாக்கித் தமது இன்பங்களைக் கெடுத்துக்கொள்வோர் உலகில் பெரும்பால ரல்லரோ? சான்றாண்மைக்குரிய சிறப்பியல்பான நிதானத்தோடு வாழ்பவர் மிகச் சில ரல்ல ரோ?"

ஆம்! மனிதசமூகம் அடக்கியாளாத காமக்குே தங்களால் அலைப்புண்கின்றது; அடக்காத துக்கத்தால் குழம்புகின்றது; விடாத கவலையாலும் ஐயத்தாலும் சிதறுகின்றது. தனது நினைப்புக்களை அடக்கிப் பரி சுத்தப்படுத்திய அறிவாளனே ஆன்மாவை அலைக் கழிக்கும் புயல்களை அடிப்படுத்துகிறான்.

புயல்காற்றில் அடிபட்டலையாநின்ற ஆன்மாக் களே! நீங்கள் எவ்விடத்தில் இருப்பினும், நீங்கள் எத்தகைய நிலைமைகளில் வாழினும், இதனைத் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் பாக்

67