பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வளரும் இன்பத்தின் மர்மம். ஒருபோதும் மாறாததும் ஒரு போதும் உங்களிடத்தி லிருந்து கவரப்படாததுமான இன்பத்தை நீங்கள் அடைவீர்கள். பிறர்மீது கொண்கிள்ள அன்பினால் தன்னை முற்றிலும் மறந்து விட்ட அகமானது, மிக மிக உயர்ந்த இன்பத்தை அடைந்த அவ்வளவேயன்றி, அழியாத தன்மையையும் அடைந்து விட்டது, அது தெய்வத்தன்மையை எய்திவிட்டமையால். கடந்து போன உங்கள் வாழ்க்கையை நோக்குங்கள் ; நீங்கள் இரக்கத்தோடாவது சுயநயமற்ற அன்போடாவது ஏதேனும் ஒரு வார்த்தையைச் சொல்லவோ ஒரு செய்கையைச் செய்யவோ நேர்ந்த நிமிஷங்களே, உங் களுக்கு மிக மிக மேலான இன்பத்தைக் கொடுத்தவை களென்று காண்பீர்கள். பரமார்த்தத்தில், நேர்மை யும் இன்பமும் ஒரு பொருளைக் குறிக்குஞ் சொற்கள். நேர்மையானது அன்பு சொரூபமாக விளங்குகிற பெரிய சட்டத்தின் ஒரு தோற்றம் ; பலவித சுய நயங்களும் நேர்மைக்கு மாறானவை ; சுபநயம் பாராட்டுதல் தெய்வ கட்டளைகளுக்கு மாறாக நடக் கும்படி செய்யும். 'யான்' என்பதை விடுத்து, எல்லா உயிர்கள் மீதும் நாம் அன்பு பாராட்டுங்காலையில், இன்பமாகிய தெய்வ - சங்கல்பத்திற்கும். பிரபஞ்சஇயற்கைக்கும் நாம் ஒற்றுமையாக நடக்கிமுேம்; உண் மையான இன்பமாகிய அவ்வாசரமகோசர சங்கல்பம் நமது சொந்த உடைமையாகின்றது, புருஷர்களும் ஸ்திரீகளும் இன்பத்தைத் தேடிக்கொண்டு குருட்டுத் 99