பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலிமைக்கு மார்க்கம். தூய அகத்தைக் கொண்டிருக்கின்றவர் மாத்திரம் அதனைக் காண்கின்றனர்; சுயநயமற்றவர் மாத்திரம் அதனை அடைகின்றனர். நீங்கள் இவ்வகண்ட இன்பத்தை இதுவரையில் அடைய வில்லையானால், நீங்கள் அதனை அடைய வேண்டு மென்று எப்பொழுதும் கோரியும், சுயநயமற்ற அன்பாகிய உயர்ந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தும், , அதனை அடையத் தொடங்குங்கள். கோரிக்கை யென்றாலும், பிரார்த் தனை யென்றாலும் மேல்நோக்கிய அவாவாகும். அஃதாவது, நிலையான திருப்தியைத் தரத்தக் கவராய் எல்லாவற்றிற்கும் மூலமாயிருக்கிற கடவுளை நோக்கி ஆன்மா நிற்றலாம். கோரிக்கை யால் அல்லது பிரார்த்தனையால், அவாவினது அழிக் கும் சக்திகள் தெய்வத்தன்மை வாய்ந்ததும் எல்லா வற்றையும் பரிபாலிப்பதுமான வலிமையாக மாற்றப் படுகின்றன. கோருதல் அல்லது பிரார்த்தித்தல் என்பது அவாவின் விலங்குகளை உதறிவிடுவதற்காகச் செய்யும் ஒரு முயற்சி. அம் முயற்சியைச் செய்யுங் கால் ஆன்மா தனிமையையும் துன்பத்தையு முற்று, ஞானத்தை அடைந்து, தனது தந்தையின் மாளிகைக் குத் திரும்பிப் போய்ச் சேரும். உலோபத்தன்மையுள்ள 'யான்' என்பதை நீங் கள் ஒழிக்கும் பொழுது, உங்களைப் பந்தப்படுத்தி பயிருக்கிற விலங்குகளை ஒன் றன்பின் ஒன்றாக நீங்கள் உடைக்கும் பொழுது, உலோபத்தால் உண்டாகும் 102