பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வலிமையை அடைதல், 'உங்கள் இன்பம் பெரியதாகவும் நீடித்து நிலைநிற்ப தாகவும் இருக்கும்; சகல வலிமையும் உங்கள் பால் வந்துசேரும். நீதி மார்க்கத்தை விட்டு விலகினவர், 'போட்டி' தம்மைப் பாதிக்காதபடி தம்மைக் காத்துக்கொள் ளுதற்காக எண்ணிறந்த முயற்சிகள் செய்கின்றனர். 'நீதி மார்க்கத்தில் ஒழுகுகின்றவர் போட்டி' யினின்று தம்மைக் காப்பதற்காக முயற்சிகள் செய்யவேண் டிய ஆவசியக மில்லை. இது வெறும் வார்த்தை யன்று . யோக்கியதையாலும் நம்பிக்கையாலும் சகல 'போட்டி' களையும் வென்று, தம்மோடு 'போட்டி' செய்த காலத்தில் தாம் தமது ஒழுக்கங்களிலிருந்து சிறிதும் விலகாது நடந்து வலிமையை அடைந்துள்ள மனிதர்கள் இக்காலத்திலும் இருக்கிறார்கள் ; அவர் களை அழிப்பதற்காக முயன்றவர்களெல்லாம் தோல் வியடைந்து கீழே விழுந்துவிட்டார்கள். நன்மை என்று சொல்லப்படும் குணங்களை யெல் லாம் ஒருவன் கைக்கொண்டிருத்தல் அவனைத் தீமை யின் சகல சக்திகளினின்றும் தப்புவிக்கும் ; அவனை ஒவ்வோர் ஆபத்தினின்றும் காப்பாற்றும் ; ' இக்கு ணங்களை வளர்ப்பதனால் ஒருவன் அசைக்க முடியாத வெற்றியை அடைவான் ; என்றென்றும் நிலைநிற்கத் தக்க வலிமையை அடைவான். 109)