பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/18

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வலிமைக்கு மார்க்கம்.

நீங்கள் உங்களை உண்மையோடு ஆராய்ந்து பார்த்து, துன்பமானது கழிந்து போகும் ஒரு நிலைமை யென்றும், அஃது உங்களால் உண்டு பண் ணப்பட்டதென்றும், உங்களுடைய சகலகேடுகளும், துன்பங்களும் துக்கங்களும், சிறிதும் பிழையாத ஒரு சட்டப்படி உங்கள் பால் வந்திருக்கின்றன வென்றும், அவற்றை நீங்கள் விரும்புவதாலும் அவற் றை அடைவதற்கு நீங்கள் அருகர்களானதாலும் அவை உங்களைச் சார்ந்திருக்கின்றன வென்றும், அவற்றை முன்னர் அநுபவித்துப் பின்னர் அறிவதால் நீங்கள் மிக்க பலமும் ஞானமும் மேம்பாடும் அடைவீர்களென்றும் நீங்கள் அபரோட்சமாக அறி யுங்கள். அவ்வபரோட்ச ஞானத்தை நீங்கள் பூர்த் தியாக அடைந்த பொழுது நீங்கள் உங்கள் நிலைமை களைத் திருத்திக்கொள்ளவும், சகல துன்பங்க ளையும் இன்பங்களாக மாற்றிக்கொள்ளவும், உங்கள் ஊழை விலக்கிக் கொள்ளவும் வல்லவர்களாவீர்கள்.

10