பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/23

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
உலகம் மனத்தின் பிரதிபிம்பம்.

நிலைமைகள் உங்களைப் பாதிக்கின்றன. புறப்பொருள்கள் உங்கள் வாழ்க்கையை ஆக்குதற்கும் அழிப்பதற்குமுரிய சக்தியைக் கொண்டிருப்பதாக நீங்கள் நம்புகின்றீர்கள். (உங்களுடைய சகல துக்கங்களும் சுகங்களும் நம்பிக்கை என்னும் இச்சிறு சொல்லில் தான் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.) நீங்கள் அப்படி நம்புவதால் நீங்கள் அப்புறப்பொருள்களுக்குக் கீழ்ப்படுகின்றீர்கள் ; நீங்கள் அவற்றின் அடிமை களென்றும், அவை தம் இஷ்டப்படி செய்யக்கூடிய உங்கள் எஜமான்களென்றும் நீங்கள் ஒப்புக்கொள் ளுகின்றீர்கள்; அப்படிச் செய்வதால் நீங்கள் அவற்றி னிடத்தில்லாத ஒரு வலிமையை அவற்றிற்குக் கொடுக்கின்றீர்கள் ; நீங்கள் புறநிலைமைகளுக்கு இலக்காகுவதோடு அவற்றைப்பற்றி நீங்கள் உங்கள் நினைப்பிற் கொண்டுள்ள விசனத்திற்கோ அல்லது" சந்தோஷத்திற்கோ, அச்சத்திற்கோ அல்லது துணி விற்கோ, பலத்திற்கோ அல்லது பலஹீனத்திற்கோ இலக்காகின்றீர்கள். பலவருகங்களாகக் கஷ்டப்பட்டுச் சம்பாதித்து வைத்திருந்த நிதிகளை யெல்லாம் சிறுவயதில் இழந்து விட்ட இரண்டு மனிதர்களை நான் அறிவேன். அதனால் ஒருவன் மிகவருத்தமடைந்து கவலைக்கும், கிலேசத்திற்கும், ஏக்கத்திற்கும் இடங் கொடுத்து விட்டான். மற்றொருவன் தனது நிதியைக் கொடுத்து வைத்திருந்த வட்டிக்கடை முரிந்து விட்டதென்று பத்திரிகையில் வாசித்தவுடன்

15