பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/24

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வலிமைக்கு பார்க்கம்.

"நமது பணம் போய்விட்டது: கவலையும் கிலேசமும் அதனைத் திரும்பக் கொண்டுவர மாட்டா. ஆனால், கடுமையான முயற்சி அதனைத் திரும்பக் கொண்டு வரும்.” என்று சாந்தமாகவும் திடமாகவும் கூறினான். அதுமுதல் அவன் அதிக ஊக்கத்தோடு வேலைசெய்து வந்தான்; விரைவில் அவன் செல்வவானாய் விட்டான். முந்திய மனிதனோ தனது பணம் போய்விட்டதைப் பற்றிக் கிலேசித்துக்கொண்டும் தனது துரதிர்ஷ்டத்தைப் பற்றி முணுமுணுத்துக்கொண்டு மிருந்து மிகத் தரித்திரமான நிலைமைகளுக்கு, உண்மையில் தனது பலஹீனமும் அடிமைத்தனமும் பொருந்திய நினைப்புக்களுக்கு ஆளாய் விட்டான், பணநஷ்டம் ஒருவனுக்கு ஒரு தீமையாக அமைந்தது, அவன் அதனைக் கிலேச நினைப்போடும் அச்ச நினைப்போடும் கொண்டதனால். பணநஷ்டம் மற்றொருவனுக்கு ஒர் நன்மையாக அமைந்தது, அவன் அதனைத் திடமும் நம்பிக்கையும் புதிய ஊக்கமும் பொருந்திய நினைப் புக்களோடு கொண்டதனால்.

புறநிலைமைகள் இன்பத்தையாவது துன்பத் தையாவது கொடுக்கும் சக்தியை உடையனவாயிருப் பின் அவை எல்லா மனிதருக்கும் ஒரே விதமாக இன்பத்தையாவது துன்பத்தையாவது கொடுத்தல் வேண்டும். ஆனால், ஒரே நிலைமை சிலருக்கு இன்பத்தையும் சிலருக்குத் துன்பத்தையும் கொடுக்கின் றது ; ஆதலால், இன்பமும் துன்பமும் நிலைமையில்

16