பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/26

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வலிமைக்கு மார்க்கம்

யும் பார்க்கிறான், ஓர் உற்சாகமுள்ள இயற்கை தத்துவ சாஸ்திரி ஒரு நாள் தனது தொழில் சம்பந்தமாக ஒரு கிராமத்தின் மூலை முடுக்குக ளெல்லாம் அலைந்து கொண்டிருந்தான் ; அப்பொழுது அவன் ஒரு நெற்களத்திற்குச் சமீபத்திலுள்ள ஓர் உவர் நீர்க்குட்டத்தைக் கண்டான். அவன் பூதக்கண்ணாடி கொண்டு பரீட்சிப்பதற்காக அக்குட்டத்தின் நீரில் சிறிது ஒரு பாத்திரத்தில் மொண்டுகொண்டிருந்த போது, அவன் பக்கத்தில் நின்ற கல்வியில்லாத ஒரு கிருஷிகனிடத்தில், அக்குட்டத்தில் மறைந்து கிடக்கும் எண்ணிறந்த அதிசயங்களைப் பற்றிச் சொல்லி, கடைசியாக "இக்குட்டத்தில் எத்தனையோ கோடிப் பிரபஞ்சங்கள் இருக்கின்றன ; அவற்றைக் காணத் தக்க புத்தியாவது கருவியாவது நம்மிடம் இல்லை.” என்று கூறினான். அவ்வார்த்தைகளைக் கேட்ட கிரு ஷிகன் "இந்நீருள் எண்ணிறந்த தவளைகள் இருப் பதை நானும் அறிவேன் ; ஆனால், அவைகளை எளிதில் பிடித்து விடலாம்" என்றான். இயற்கைப் பொருள்களின் ஞானம் நிரம்பிய மனத்தையுடைய அவ்வியற்கை தத்துவ சாஸ்திரி இயற்கையின் அழகையும் ஒற்றுமையையும் காட்சிக்குப் புலப்படாத பெருமையையும் அக்குட்டத்தில் பார்த்தான் : அப்பொருள்களின் ஞானமில்லாத மனத்தையுடைய கிருஷிகன் அருவருக்கத்தக்க தவளைகளை மாத்திரம் அக்குட்டத்தில் கண்டான்.

18