பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/35

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி

சகல பலத்தின் காரணமும் சகல பலஹீனத்தின் காரணமும் அகத்துள் இருக்கின்றன; சகல சுகத்தின் காரணமும் சகல துக்கத்தின் காரணமும் அகத்துள்ளேயே இருக்கின்றன. அகத்திலிருந்து விரிவதைத் தவிர வேறாக எவ்வித அபிவிர்த்தியு மில்லை ; ஞானத்தில் கிரமமாக அபிவிர்த்தியடை வதைத் தவிர, வேறாக ஆக்கத்திற்கும் சாந்தத்திற் கும் எவ்வித மார்க்கமு மில்லை.

நீங்கள் நிலைமைகளால் விலங்கிடப்பட்டிருக்கிறதாகக் கூறுகின்றீர்கள்; நல்ல நிலைமைகளையும், விரிந்த செல்வாக்கையும், ஆரோக்கிய நிலைமைகளையும் நீங்கள் அடையவேண்டு மென்று கதறு கின்றீர்கள்; உங்கள் கைகளையும் கால்களையும் கட்டியிருக்கிற உங்கள் விதியை நீங்கள் நிந்திக் கின்றீர்கள். உங்களுக்காகத்தான் நான் எழுதுகிறேன்; உங்களுக்காகத்தான் நான் சொல்லுகிறேன். என் வார்த்தைகளைக் கேளுங்கள்; என் வார்த்தைகள் உங்கள் அகத்துள் என்றும் பிரகாசித்துக்கொண் டிருக்கட்டும்; நான் சொல்வது முற்றிலும் உண்மை:- நீங்கள் உங்கள் அக நிலைமையை அபிவிர்த்தி செய்வதற்கு உறுதியாகத் தீர்மானித்துக்கொள்வீர் களாயின், நீங்கள் உங்கள் புற நிலைமையில் அடைய வேண்டுமென்று விரும்புகிற அபிவிர்த்திகளை அடை வீர்கள். இவ்வழி தொடக்கத்தில் மனோகரமாகத் தோன்றாதென்பதை நான் அறிவேன். (மெய் எப்பொ

27