பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/36

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வலிமைக்கு மார்க்கம்:

ழுதும் அப்படித்தானிருக்கும்; பொய்யும் மாயையும் தொடக்கத்தில் மனோகரமாகத் தோன்றி மனத்தைக் கவரும்.) ஆனால், நீங்கள் இவ்வழியில் செல்வதாகத் தீர்மானித்துக்கொள்வீர்களாயின், நீங்கள் உங்கள் மனத்திலுள்ள பலஹீனத்தை நீக்கி உங்கள் மனோ சக்திகளும் ஆன்மவலிகளும் விரியும்ப செய்து விடாமுயற்சியால் உங்கள் மனத்தை ஒழுங்குபடுத்தி வருவீர்களாயின், உங்கள் புற வாழ்க்கையில் உண்டாகும் அற்புதமான மாறுதல்களைக் கண்டு நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள். நீங்கள் செல்லச் செல்ல உங்கள் வழியில் பொன் போல் உதவும் சந்தர்ப்பங்கள் வந்து குறுக்கிடும் ; அவற்றைச் சரியாக உபயோகிப்பதற்குத் தக்க வலியும் அறிவும் உங்கள் அகத்தில் உற்பத்தியாகும்; நீங்கள் அழையாமலே உங்களிடம் சரிசமமான சிநேகிதர்கள் வந்து சேர்வார்கள்; காந்தத்தினிடத்து ஊசிகள் போய்ச் சேர்வது போல, அநுதாபமுள்ள மனிதர்கள் உங்களிடம் வந்து சேர்வார்கள் ; நீங்கள் வேண்டும் புத்தகங்களும் மற்றைய உதவிகளும் நீங்கள் தேடாமலே உங்களுக்குக் கிடைக்கும்.

ஒருகால் உங்கள் வறுமை விலங்கு பளுவா யிருக்கலாம்; நீங்கள் சிநேகித ரில்லாது தனியா யிருக்கலாம்; உங்கள் பளுவு குறைய வேண்டுமென்று நீங்கள் மிகுந்த ஆவலோடு விரும்பலாம். ஆனால், உங்கள் வறுமைவிலங்கின் பளுவு முன்போலவே

28