பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/39

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி.

நாற்றங்கள் நிறைத்திருக்கலாம். நீங்கள் ஆரோக்கியத் திற் கொத்த ஒரு பெரிய வீட்டை அடைவதற்கு விரும்பலாம். அப்படியானால், நீங்கள் முதலில் உங் கள் சிறிய குடிசையை ஒரு சிறிய சுவர்க்கம் போலாக்கிக்கொண்டு, நீங்கள் விரும்பிய பெரிய வீட்டை அடைவதற்கு உங்களைத் தகுதியுள்ளவர்க ளாக்கிக் கொள்ள வேண்டும்; உங்கள் சிறிய குடிசையை மாசு மறு இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கையிலுள்ள பொருளுக்குத் தக்கபடி உங்கள் குடிசையை அழகுள்ளதாகவும் இனிமையுள்ள தாகவும் தோற்றும்படி செய்யுங்கள். உங்கள் சாதாரண சாப்பாட்டை முழு கவனத்தோடும் சமையல் செய்யுங்கள் ; உங்கள் எளிய சாப்பாட்டை நீங்கள் எவ்வளவு சுவையுள்ளதாகச் செய்யக் கூடுமோ அவ்வளவு சுவையுள்ளதாகச் செய்யுங்கள். உங்கள் குடிசையில் விரித்தற்குப் பாய் உங்களிடத்தில் இல்லையானால், உங்கள் குடிசை அரங்குகளில் சிரிப்பும் வரவேற்பு மாகிய பாயை விரித்து, அதன் மீது இனிய வார்த்தைகளாகிய ஆணிகளைப் பொறுமையாகிய சம்மட்டியால் அடித்து இறுக்குங்கள். அத்தகைய ஒரு பாய் சூரிய ஒளியால் நிறம் குன்றாது ; அடிக்கடி உபயோகிப்பதால் கிழியமாட்டாது. உங்க ளுடைய தற்கால வசதிகளை இவ்விதமாக நீங்கள் மேன்மைப்படுத்திக்கொள்வதால், நீங்கள் அவற்றிற்கு மேற்பட்ட வசதிகளை அடையத் தகுதியுள்ளவர்க ளாவீர்கள். அவை உங்களுக்கு அவசிய மில்லாதன


31