பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/44

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
வலிமைக்கு மார்க்கம்.

கள் ; நித்திய நீதியாயும் நித்திய நன்மையாயும் இருக்கிற கடவுளை அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருங்கள் ; நீங்கள் கண்டப் பொருள்களையும் அநித்தியப் பொருள்களையும் விட்டு அகண்டமாயும் நித்தியமாயு முள்ள பொருளிடத்துச் செல்ல முயலுங்கள். பிறர் உங்களுக்குத் துன்பம் செய்கின்றனர் அல்லது உங்களை இம்சிக்கின்றனர் என்ற மயக்கத்தை விட்டு விடுங்கள் ; உங்கள் அகவாழ்க்கையையும் அதனை யாளும் நியதிகளையும் பற்றிய ஞானத்தால் உங்கள் அகத்திலுள்ளதே உங்கள் புறத்தில் வந்து உங்களை உண்மையில் துன்பப்படுத்துகிற தென்று நீங்கள் அபரோட்சமாக அறிய முயலுங்கள். தன்மீது தான் இரக்கம் கொள்ளுதலைப் பார்க்கினும் தாழ்ந்ததும் அவமதிப்பைத் தரத்தக்கதும் ஆன்மாவைக் கெடுக்கத்தக்கதும் வேறொன் றில்லை. அத்தகைய புழு ஒன்று உங்கள் இருதயத்தைத் தின்றுகொண்டி ருக்கும்பொழுது நீங்கள் பூரண வாழ்வை ஒரு போதும் அடையமுடியாது. நீங்கள் பிறர்மீது குறை கூறுகிறதை விட்டு, நீங்கள் உங்களையே குறை கூறத் தொடங்குங்கள். மாசற்ற தூய்மையும் குற்ற மற்ற நன்மையும் பொருந்தியிராத உங்கள் செயல் களையும், அவாக்களையும், நினைப்புக்களையும் கவனியாது விடாதீர்கள், நீங்கள் அவ்வாறு செய்வதால் நித்திய வஸ்துவாகிய மலையின் மீது உங்கள் வீட்டைக் கட்டுகின்றீர்கள் ; உங்கள் க்ஷேமத்திற்கும் இன்

36