பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விரும்பாத நிலைமைகளை விலக்கும் வழி. யவர்களா யுமிருந்தாலும் பெரிய காரியமில்லை ; ஏனெ னில், நாம் நமது வாழ்நாளின் ஒவ்வொரு நிமிஷத் திலும் புதிய புதிய நினைப்புக்களை நினைத்துக்கொண் டும் புதிய புதிய செயல்களைச் செய்து கொண்டும் இருக்கிறபடியால், நாம் அவற்றை யெல்லாம் நல்லன வாக அல்லது தீயனவாகச் செய்துகொள்ளும் சக்தியை உடையவர்களா யிருக்கிறோம். அன்றியும், ஒரு மனிதன் தனது பணத்தை இழக்கும்படி அல்லது தனது நிலையை விடும்படி நேரிட்டால், அவன் தனது தைரியத்தை இழப்பதும் ஒழுக்கத்தை விடுவதும் ஆவசியகமில்லை ; இவற்றில்தான் அவனுடைய செல்வமும் பலமும் சந்தோஷமும் இருக்கின்றன. 'யான்' என்பதைப் பற்றிக்கொண்டிருக்கிறவன் தன்னை அழிக்கும் விரோதியாகிறான் ; அவனை அழிப்பதற்காக அவனைச் சுற்றி விரோதிகள் சூழ் கின்றார்கள். 'யான் ' என்பதைத் துறக்கிறவன் தன்னை இரட்சிக்கும் கர்த்தனாகிறான் ; அவனைக் காப்பதற்காக அவனைச் சுற்றிச் சிநேகிதர்கள் சூழ் கின்றார்கள். பற்றற்ற ஹிருதயமாகிய தெய்வ கிர ணத்தின் முன்னர்ச் சகல இருள்களும் நீங்கிவிடுகின் றன, சகல மேகங்களும் கலைந்து விடுகின்றன ; எவன் 'யான்' என்பதை வென்றானோ அவன் பிர பஞ்சத்தையே வென்றவனாகிறான். நீங்கள் 'யான்' என்பதைவிட்டு வெளியே வாருங்கள்; நீங்கள் உங்கள்