பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/59

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

நினைப்பின் மௌன வலிமை
(சக்திகளை ஆளுதலும் செலுத்துதலும் )


பிரபஞ்சத்திலுள்ள சக்திகளிலெல்லாம் மிக வலிமையுள்ள சக்தி மௌன சக்தி. “மௌனம் மலையைச் சாதிக்கும்.” சரியாகச் செலுத்துங் காலையில், ஒரு சக்தி எவ்வளவுக்கெவ்வளவு வலிமையுள்ளதோ, அவ்வளவுக் கவ்வளவு இலாபத்தையும், பிசகாகச் செலுத்துங் காலையில், அவ்வளவுக் கவ்வளவு நஷ்டத்தையும் தரும். நீராவி மின்சாரம் முதலிய யந்திர சக்திகள் சம்பந்தப்பட்ட மட்டில் இவ்வுண்மையைப் பலரும் அறிந்திருக்கின்றனர். ஆனால், சக்திகளிலெல்லாம் மிக மிக வலியதாகிய நினைப்புச்சக்தியை, சிருஷ்டிக்கும் பிரவாகமாகவும் சம்ஹரிக்கும் பிரவாகாகவும், அனுப்பிக் கொண்டிருக்கிற மனோவுலகம் சம்பந்தப்பட்ட மட்டில், இவ்வுண்மையை அறிந்து உபயோகிப்பவர் மிகச் சிலரே.


தாம் அபிவிர்த்தியாகிக்கொண்டிருக்கிற இக்காலத்தில் மனிதர் அச்சக்திகளை ஆளுவதற்குத் தொடங்கியிருக்கின்றனர். அவருடைய தற்கால முக்கிய நோக்கமெல்லாம் அச்சக்திகளை அடக்கியாளுதலே. இந்த ஸ்தூல உலகத்தில் மனிதர் அடையக்கூடிய ஞானமெல்லாம் தன்னை அடக்கியாள்தலிலேயே அடங்கியிருக்கிறது. உங்கள் விரோதிகள்பால் அன்பு பாராட்டுங்கள் என்னும் கட்டளையானது, இப்பொழுது மனிதர்களை அடிமைகளாக்கிச் சுயநலப் பிரவாகங்களில் அடித்துக்கொண்டு போகிற மனோசக்திகளை வசப்படுத்தி அடக்கியாளுதற்


51