பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

  • .

அமைதிக்குக் கொண்டுவரச் சக்தியுள்ளவர்களாவ தற்கு நீங்கள் பலநாள் முயல்வது ஆவசியகம்; ஆனால், இடை விடாது முயன்றால் நீங்கள் நிச்சயமாக அதனைச் செய்து முடிப்பீர்கள். நீங்கள் அமைதியாயிருக்கும் நேரத்தில் நீங்கள் எதனைச் செய்து முடிக்கவேண்டு மென்று நினைக்கின்றீர்களோ, அதனை நீங்கள் செய்து முடிக்க வேண்டும். நீங்கள் மறுபடியும் பகற்காலத்தில் உங்கள் வியாபாரத்தில் பிரவேசித்த பொழுது, உங்கள் கவலைகள் மறுபடி , யும் உங்கள் அகத்தில் பிரவேசித்து உங்களை ஆளத் தொடங்கும் ; அப்பொழுது, அமைதியான நேரத் தில் நீங்கள் குறித்த காரியமும் மார்க்கமும். பிச்தா னவை யென்றும் அறிவில்லாதவை யென்றும் நீங்கள் நினைக்கத் தொடங்குவீர்கள்; ஆனால், அவ்வித நினைப் - புக்களுக்கு நீங்கள் இடங்கொடுத்தல் கூடாது. - அமைதியான நேரத்தில் தோற்றிய காரியத்தையோ, மார்க்கத்தையோ நீங்கள் சிறிதும் விடாது பின் பற்றுங்கள் ; நீங்கள் உங்கள் கவலையின் நிழல்களைப் - பின்பற்றாதீர்கள். அமைதியான நேரமே சரியான அறிவையும் தெளிவையும் கொடுக்கிற நேரம். மனத்' - தை அவ்விதமாகப் பயிற்றுவதால் சிதறுண்ட நினைப் புச்சக்திகள் திரும்ப ஒன்று சேர்ந்து குறித்த காரி யத்தில் சென்று அதனைச் செய்து முடிக்கும். அமை தியும் பலமுமுள்ள ஒரு நினைப்பின் எ காக்கிரத்தின் முன் எத்தகைய கஷ்டமும் நிலைநிற்கமாட்டாது; ஒருவனது மனோசக்திகளை விவேகத்துடன் செலுத் D