________________
ஆரோக்கியமும் வெற்றியும் வகிமையும்.
வும் இருந்தால், நல்ல நிலைகளும் பெரிய காரியங்களும்
உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன
என்ற அபிப்பிராயத்தை நீங்கள் மனத்தில் கொண்டு,
உங்கள் கடமைகளை உங்கள் மனச்சாக்ஷிக்கு
விரோதமில்லாமல் ஊக்கத்தோடு செய்யுங்கள். நல்ல சமயம்
வாய்த்துப் புதிய நிலை தோன்றும் பொழுது,
அந்நிலையில் பிரவேசிக்கத்தக்க விதத்தில் உங்கள்
மனத்தைப் பக்குவப்படுத்திக்கொண்டும், உங்கள்
விவேகத்தை வளர்த்துக்கொண்டும், நீங்கள் அந்நிலையை
எதிர்பார்த்துக்கொண்டிருங்கள்.
நீங்கள் செய்யும் வேலை எதுவாயிருந்தாலும்,
அதில் உங்கள் முழுமனத்தையும் ஏகாக்கிரப்படுத்துங்கள்;
உங்கள் ஊக்கம் முழுவதையும் அதில்
செலுத்துங்கள். சிறிய வேலைகளைக் குறையறச்
செய்து முடிப்பவருக்குப் பெரிய வேலைகள் நிச்சயமாக
வந்து சேரும். எப்பொழுதும் நீங்கள் உறுதியாக
மேல்நோக்கிச் சென்றுகொண்டிருங்கள் ;
ஒருபோதும் நீங்கள் கீழ்நோக்கிச் செல்லாதீர்கள். இதில்
தான் உண்மையான வலிமையின் மர்மம்
அடங்கியிருக்கின்றது. நீங்கள் உங்கள் சக்திகளை எப்படி
ஆளலா மென்பதையும், அவற்றை ஒரு குறித்த
விஷயத்தில் ஒரு குறித்த நிமிஷத்தில் எப்படி
ஏகாக்கிரப்படுத்தலா மென்பதையும் அடிக்கடி
அப்பியசித்துக் கற்றுக்கொள்ளுங்கள், மடையர்
தமது மனோபலத்தையும் ஆன்மபலத்தையும் அற்பத்தனமான
சிந்தனைகளிலும் மூடத்தனமான பேச்சுக்
83