பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணவ ரியல்.

௧௩-ம் அதி.–களவு விலக்கல்.

களவுடை யவர்தரா துளமொடொன் றெடுத்தல். ௧௨௧.
வஞ்சித்துக் கொளல் வாங்கிக் கொடாமை. ௧௨௨.
களவினை யேவுதல் களவிற் குதவுதல். ௧௨௩.
தடுக்கக் கூடிய விடத்ததைத் தடாமை. ௧௨௪.
உடையவர் நலத்தையொத் துருக்கொளு மிம்மறம். ௧௨௫.
களவினைக் கள்ளரு மெள்ளுவர் பிறர்முன். ௧௨௬.
கள்ளுநர் தடுப்பவர்க் கொல்லவும் படுவர். ௧௨௭.
கள்ளுந ருடையராற் கொல்லவும் படுவர். ௧௨௮.
களவினாற் பலபிறப் பளவிலா வறுமையாம். ௧௨௯.
களவினை விலக்கினார்க் களவிலாச் செல்வமாம். ௧௩0.

௧௪-ம் அதி.–சூது விலக்கல்.

சூதுவஞ் சனையதற் கேதுவாங் கருவி. ௧௩௧.
பந்தயங் குறிக்கும் பலவிளை யாடல். ௧௩௨.
அதுபொரு டருதல்போ லனைத்தையும் போக்கும். ௧௩௩.
உற்றவூ ணுடைமுதல் விற்றிடச் செய்யும். ௧௩௪.
பொறையு மறிவும் புகழுங் கெடுக்கும். ௧௩௫.
சூதர்தஞ் சேர்க்கையாற் சூதுகைப் புக்கிடும். ௧௩௬.
சூதரா தியரைத் தூர நிறுத்துக. ௧௩௭.
காலங் கழித்திடக் கவறுகை யெடுப்பர். ௧௩௮.
அதனினு மாலமுண் டழிதனன் றென்க. ௧௩௯.
கவறுருள் களத்தைக் கனவினுங் கருதேல். ௧௪0.


9


3