பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இல்வாழ்வியல்.

௩௧-ம் அதி.–இல்வாழ் வுயர்வு.

இல்வாழ் வென்பதோ ரில்லினில் வாழ்தல். ௩0௧
எதிபாற் றுணையுடன் வதிதன் மிகநலம். ௩0௨
இல்வாழ் வார்கட னில்லற மியற்றல். ௩0௩
என்றும்வே ளாண்மை யியற்றலே யில்லறம். ௩0௪
இல்வாழ் வில்லெனி லில்லையிவ் வுலகே. ௩0௫
இன்னிலை யெவற்றினு நன்னிலை யென்ப. ௩0௬
எந்நிலை யவர்க்கு மில்வாழ் வார்துணை. ௩0௭
அந்நிலைப் பெருக்கே யரசென வறிக. ௩0௮
அதற்கா நன்முத லன்பெனும் பொருளே. ௩0௯
அதிலாம் பயன்க ளறமுத னான்கே. ௩௧0

௩௨-ம் அதி.–இல் லமைத்தல்.

அகல நீள மரைக்கான் மைல்கொளல். ௩௧௧
ஈரிரு புறமதி லெதிரெதிர் வழிசெயல். ௩௧௨
மத்தியிற் புறமதின் மட்டமே லிற்செயல். ௩௧௩
இல்லிற் கீரா யிரமடி சதுரமாம். ௩௧௪
நிலமேன் மதிற்கு நேர்கால் கீழ்செயல். ௩௧௫
வளியன னீர்மா வழியா வகைசெயல். ௩௧௬
வளியொளி யளவினுள் வரச்செல வழிசெயல். ௩௧௭
பொருட்குஞ் செயற்கும் பொருத்தமாப் பகுத்திடல். ௩௧௮
நிலவறை தான்செய னிதிமிகின் மேற்செயல். ௩௧௯
நற்றரு செடிகொடி யிற்புறத் தமைத்திடல். ௩௨0


18