மெய்யறம்
௬௩-ம் அதி.–கண்ணோட்டம்.
கண்ணோட்டஞ் சுற்றமேற் கண்ணோடி வீழ்தல்.
௬௨௧
சுற்றங் கண்டுழிக் குற்ற மறத்தல்;
௬௨௨
சுற்றங் கண்டுழி யுற்றன செய்தல்.
௬௨௩
கண்ணிற் கழகு கண்ணோட்ட மென்க.
௬௨௪
உளத்தொடு சேர்ந்தகண் ணோட்ட முயர்ந்தது.
௬௨௫
தீவினை யாளர்பாற் றீதுகண் ணோட்டம்.
௬௨௬
கண்டுநஞ் சுணல்கரை கடந்தகண் ணோட்டம்.
௬௨௭
கருமம் கெடாவகை கண்ணோடல் தக்கது.
௬௨௮
சிறுவர்பா லென்றுஞ் சிறிதுகண் ணோடுக.
௬௨௯
முறைசெயும் பொழுததை முற்றுமே விடுக.
௬௩0
௬௪-ம் அதி.–சூழ்ச்சி புரிதல்.
இயற்றுவ தெல்லா மெண்ணியே யியற்றுக.
௬௩௧
எண்ணா தியற்றுதல் கண்ணிலார் நடையாம்
௬௩௨
இயற்றத் தொடங்கி யெண்ணுத லிழுக்காம்.
௬௩௩
இயற்றுமுன் செயலி னியல்பினை யாய்க.
௬௩௪
அறமெனிற் சுற்றுரு மறிஞரோ டெண்ணுக.
௬௩௫
வரவு செலவு வரும்பய னெண்ணுக.
௬௩௬
செய்வலி செய்வழி செய்பவர்க் கருதுக.
௬௩௭
வரவிற் செலவு வளருமேல் விடுக.
௬௩௮
பெரும்பயன் றராதெனிற் பேணா தொழிக.
௬௩௯
செய்வலி நெறியாள் சீரின்றேல் விடல்.
௬௪0
34