பக்கம்:1917 AD-மெய்யறம், வ உ சி.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 

சிறப்புப் பாயிரம்

 

மெய்யற மியற்றினோன் வையமோர் சிதம்பரம்.
வள்ளுவ ரெல்லையிம் மறைக்கு மெல்லையாம்.
மடியருங் கேட்கவோ ரடியால் யாத்தனன்.
நுதலிய தறவழி முதனிலை யடைதல்.
அறம்பொரு ளின்பம்வீ டடைதல் பயனே.
விரோதி கிருதுவில் விளம்பப் பெற்றது.
கண்ணனூ ரரண்மனை யெண்ணியாத் திடுகளம்.
ஆன்றமா தேவ னகமரங் கேற்றிடம்.
ஏழையுங் கற்குமா றியற்றப் பட்டது.
மெய்யற மென்றும் வையகத் துலாவுக. ௧0