பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/16

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

14 தினுசுமீனாகிய அப்புக்குட்டி மீன் வகையைச் சேர்ந்த உரிஞ்சு மீனுக்கு அப்பெயர் ஏன்

கொடுக்கப்பட்டதென்றால், அதின் தலை உச்சியில் உரி ஞ்சும் பில்லை இருப்பதினாலேதான். இந்த உரிஞ்சும் அவயவம் குறுக் காக ஓடும் பல சட்டங்கள் வட்டமான ஒரு சட்டத்தின் மேல் அமைக் கப்பட்டு இருக்கிறது. இதின் உதவியால் இந்த மீன்கள் கப்பல் பக்க ங்களிலும், திமிங்கலங்களின் மேலும், சுறாமீன்களிலும், ஆமைகளி ன்மேலும் ஒட்டிக்கொண்டு, தங்கள் பிரயாசை ஒன்றுமில்லாமல் பல இடங்களுக்கும் கொண்டுபோகப்படுகின்றன. அம்மீன் குளத்தின் கவரின் மேல் ஒட்டிக்கொண்டிருப்பதைச் சாதாரணமாய்க்காணலாம். இந்த உரிஞ்சு மீனுக்குள்ள ஒட்டிக்கொள்ளும் வல்லமை மிக ஆச்சரியப்படத்தக்கது. இரண்டு அடி நீளமுள்ள ஒரு சிறு உரிஞ்சு மீனை, இருபது பவுண்டு நிறையுள்ள நீரடைத்த ஒரு தொட்டியி ன் உள்ளே விட்டு நன்றாய் ஒட்டிக்கொண்டபின் அதின் வாலைப் பிடித்துத் தூக்கினால், அந்தத் தொட்டியை அது தாங்கக்கூடும். நீரில் இருக்கும் பொழுது, அது, மிகச்சுலபமாய் இன்னும் அதிகமா யுள்ள பாரத்தையும் இழுக்கக்கூடும்.

கப்பலிலிருந்து எறியப்படும் பண்டங்களும், திமிங்கலத்தின் இரையின் மிகுதியான துண்டுகளும் அம்மீன்களுக்கு இலவசச் சாப் பாடாய் கிடைக்கின்றன. ஆனால் அனேகந்தடைவைகளில் சுறா மீன் கள் அவைகளை விழுங்கிவிடுகின்றன. முதல் முதுகுத்துடுப்பு மாறி உரிஞ்சும் அவையவமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

கொலம்பஸ் என்பவர் காஸ்டைலிலும் (Castile), லீயானிலிலும் (Leon) இருப்பவர்களுக்கு, புதிய உலகத்தைப்பற்றி (அமெரிக்கா) சொன்ன பலவிநோதமான கதைகளில், மேலிந்திய தீவுகளில் காரிப் செம்படவர்கள், ஆமையையும், மீன்களையும் பிடிப்பதற்கு உரிஞ்சு மீன்களை எவ்வாறு உபயோகப்படுத்துகிறார்கள் என் பதையும் விவரித்திருக்கிறார். அதின் வாலில் ஒரு கயிற்றைக்கட்டி பிடிக்கவேண்டிய ஆமைக்குச் சமீபத்தில், படகிலிருந்து அது ஜலத்தில் விடப்படுகிறது ; அந்த ஆமை ஒரு பெரிய கெட்டியான பொருளாயிருக்கும் காரணத்தைக்கொண்டே, அதில் பலமாய் ஒட்டிக்கொள்ளுகிறது. அது மிகவும் உறுதியாய் ஒட்டிக்கொள்ளு கிறபடியால், அதை யிழுத்து ஆமையைப்பிடித்துக்கொள்ளக் கூடியதாய் செய்கிறது. தற்காலம், குயுபா (Cuba) விலுள்ள செம்படவர்களுக்கு ஆமை பிடிக்கும் இச்சாமர் தயவழி தெரியாது. ஜான்ஜிபார் (Zanzibar) கரையிலுள்ள வர்களும் இந்த சாமர்த்திய மான வழியை அனுசரிக்கிறார்கள் என்று சாமாசாரம் வந்திருக் கிறது. சீனதேசத்து செம்படவர்களும் இதை அனுசரிக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. நம்முடைய செய்குளங்களிலும், தனக்குச் சமீபத்திலுள்ள பெரிய பிராணியானது, தன்னி னத்தைச் சேர்ந்ததாய் இருந்தாலும், பெரிய மீனாயிருக்குமாயின் அதில், ஒட்டிக்கொள்ளும்பழக்கத்தைக்காட்டுகிறது. இப்பழக்கம், ஒருவேளை, அதின் நித்திய ஆகாரத்தை அதிக சிரமமில்லாமல் பெற்றுக்கொள்ள அவைகளுக்குண்டாயிருக்கலாம். மற்ற மீன் களுக்கு (உளுவைகளுக்கு) சில கால் துடுப்புகள் மாறி உரிஞ் சும் அவையவமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த