பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


கருவியால், பிரயாசையில்லாமல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப்போவதற்கல்ல; அதற்கு மாறாக, நீரோட்டத்திலும், பின்வாங்கும் அலையின் வேகத்தினாலும் அடித்துக்கொண்டு போகாதிருக்கும்படிக்கே. இந்த உளுவைகள், சிறுமீன்கள் தான். அதற்கென்று ஏற்பட்ட. ஒரு அவயவமில்லாவிட்டால், நீரின் வேகத்தை எதிர்ப்பதற்கு அவைகளால் முடியாது.

நம்முடைய சாதாரணமாயுள்ள அப்புக்குட்டியின் இருபக்கத்திலும் நீட்டுப்போக்கில் கோடிடப்பட்டிருக்கும். இரண்டு பக்கம் நன்றாய்த்தெரியும் வெள்ளைப்பட்டையாயும் நடுவில் கறுத்தபட்டைக் கோடுமாயிருக்கும். வேறு பலமீன்களைப்போல், தன்னிஷ்டம்போல் நிறக்குறிகளை அடக்கவும் மாற்றவும்கூடிய சக்தி அதற்குண்டு; பக்கங்களிலுள்ள வெள்ளைக்கோடுகள் அடிக்கடி சிலநிமிஷநேரம் மறைந்துபோகும்.

சிலவேளைகளில், செம்படவர்கள்கூட, இதற்குச்சம்பந்தமில்லாத வேறு தினுசு மீனை, சாதாரண, அப்புக்குட்டி (Remora) மீனென்று தவறாய் நினைக்கிறார்கள். இதுதான் கடல் விரால் (Butterfish) என்பது. அதற்கும் இதுமா திரியே, பக்கங்களில் நீளமாய், வெள்ளைக் கோடுகளும் அவைகளுக்கிடையில் கறுப்புக்கோடுகளும் இருக்கின்றன. தேகமும் கொஞ்சம் மெலிந்திருப்பதால், இவ்வாறு தவறி நினைப்பதற்கு இடங்கொடுக்கிறது. ஆனால் அது உரிஞ்சு மீன் அல்ல. அதின் பழக்கங்களும் வேறு. அதைப்போல் பெரிய மீனின் இரையில் மிகுந்துவிழும் துண்டுகளைப் பொறுக்கித்தின்னாமல், தானே இரைதேடிச்செல்லுகிறது. கடல் விரால் என்று அதின் பெயர் அதின் கொள்ளையிடுங்குணத்தையும், மூர்க்கத்தனத்தையும் தெரிவிக்கிறது.

குறவான் மீன்கள், (Trigger fishes) பலவகைப்படும். அவற்றில் கொஞ்சம் பழுப்புநிறமாயுள்ளது சாதாரண குறவான் மீன் என்று சொல்லப்படும்; நீல நிறமாயிருப்பதற்கு பச்சைக்குறவான் என்று பெயர் ; இந்த நிறம் மின்சாரவிளக்கில் பிளம் (plum) வர்ணமாக மாறும். கறுப்பு, மஞ்சள் வரியையுடைய மீன்களுக்கு மஞ்சள் வரிக்குறவான் என்று பெயர். அதின் முதல் முதுகுதுடுப்பில் அரம் போன்ற எலும்பு முட்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை நிமிர்த்தால் மடக்கமுடியாது. ஆகையால் அவற்றிற்கு ஆங்கிலபா ஷையில் (File-fishes) அரம் மீன் என்று பெயர் கொடுக்கப்பட்டது. அதில் சதை மிகவும் கொஞ்சம். அதை யாரும் சாப்பிட விரும்புவ தில்லை. அது அநேகருக்கு விஷமாக முடிகிறது. இந்தக்கரையி லிருக்கும் வலையர்களுக்கு அது ஒன்றும் செய்வதில்லைபோற் காண்கிறது. அவர்கள், அதிக நிறமில்லாத மீன்களை ஏராளமாய்ச்சாப்பிடு கிறார்கள். அதிக அழகான வர்ணமுள்ள மீன்கள் தான் விஷமாய் இருக்கக்கூடும். அப்படியானால், அழகான நிறத்தைக்கண்டதும், அது "எச்சரிக்கை" நிறமாக அமைக்கப்பட்டது என்றுகொள்ள வேண்டும்.