பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

27 அனேக தினுசு மீன்கள், நல்லதண்ணீரில் கொண்டு விட்டாலும் பிழைத்திருக்கின்றன. மீன் இலாகாகாரர் இப்பொழுது, இந்த மீன்களை, கடலோரமுள்ள நீரோடைகளிலும், ஆற்று முகத்துவாரங்களிலு மிருந்துகொண்டுவந்து, குளங்களில் நிறப்பிவைக்கிறார்கள். அன்னீரோடைகளிலும், ஆற்றுமுகத்துவாரங்களிலும் அம்மீன் குஞ்சுகள் சில காலங்களில் ஏராளமாய்கிடைக்கும். அவைகளுக்கு ஒருவித சாம்பல் வர்ணமிருப்பதால் மிக அழகாயிருக்கும். அவைகளின் சிதழ்கள் கொஞ்சம்பெரிதாகவேயிருக்கும்; அவைகளின் மூக்கும் வாயும் தழைமேயும் வழக்கத்திற்கேற்றபடி, அகலமாயும் தட்டையாயுமிருக்கும். சாதாரணமான லுட்டியானஸ் (Lutianus) வகுப்பைச்சேர்ந்த அனேகம், கலவான் (Sea-perches) மீன்களும் இந்தக்குளத்தில் வைக்கப்பட்டி டிருக்கின்றன. அவைகளும், நெ. 5, 6, 8, குளங்களிலுள்ள அவற்றின் இனமான மீன்களைப்போலவே, மிகக்கூர்மையான புத்தியும், இச்செய்குளங்களிலுள்ள மற்றெந்த மீன்களைப் பார்க்கிலும், தீனியின் ஏற்பாடுகளை நன்றாய் கவனிக்கும் தன்மையுடையவைகளாயுமிருக்கின்றன. அவைகள், வேலைக்காரன் மீன் தொட்டியைக்கையிலெடுத்துக்கொண்டு எப்பொழுது வருகிறானோ வென்று அதிக ஆவலாய்காத்துக்கொண்டிருக்கும். அவன் வருவதை, அவன் அவைகளிருக்கும் குளத்திற்குச்சமீபத்தில் வருவதற்கு அதிக நேரத்திற்கு முந்தியே, அறிந்துக்கொள்ளுகின்றன. அவன் வருவதே அவைகளுக்கு குதூகுலம் உண்டாக்குவதற்குப் போதுமானதாயிருக்கிறது. இந்தக்குளத்தில் ஒரு வினோதமான, கொஞ்சமும் அழகில்லாத பலவிதமான பூனைமீன்கள் (Cat-fishes) இருக்கின்றன. இவை (Cat fish) கெளுத்தி மீன்.

கள் தான் கெளுத்தி மீன் வகை. அவைகளுக்கு பூனைமீன்,என்று ஆங்கிலேய பாஷையில் பெயரிட்டதற்குக்காரணம் அதின் வாயை சுற்றி நீண்ட மீசைகளிருப்பதினால்தான். அதின் இனம் அதிகமானது அம்மீனினங்கள் கடலிலும், ஆறுகளிலும், குளங்களிலும் நிறைந்திருக்கின்றன. அதின் தோல், வழுவழுப்பாயும் சிதழ் இல்லாமலும் இருக்கும். கெளுத்தி மீன், சாப்பிடுவதற்கு அதிக உசிதமாக எண்ணப்படுகிறது. கெளுத்தி மீனைச்சேர்ந்த ஒரு தினுசு மீன்கள், கடலில் ஏகக்கூட்டமாய் அகப்படுகிறது. ஒருதடவையில் மலையாள ஜில்லாபக்கம் ஆயிரக்கணக்காய்ப் பிடிக்கலாம். மலையாள