பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

செய்யப்பட்ட ஆச்சரியமான மிதப்பினால் மிதந்துக்கொண்டிருக்கும் “ஐயாந்தைனா” என்னும் நத்தைகளும் (snails), பாம்பன், கீழக்கரை, தூத்துக்குடி முதலிய இடங்களில் அகப்படும் பல்லாயிரங்கோடி பவளப் பூச்சிகளும், நம்மிடத்தில் கொண்டுவரப் படுகின்றன. இடம் போதாததினால், இவைகளை வைத்துக்காட்டக் கூடவில்லை. பெரிய குளங்களில் கடம்பானை (Octopus) வைப்பதற்கு கூட இடம் இல்லை. அது கடல்வாழும் பிராணிகளில் இயற்கையில் சிருஷ்டியின் மகிமை யென்று சொல்லும்படியாக அவ்வளவு பரவசப்படுத்தும் பார்வையும் அழகும் வாய்ந்தது.

காட்டப்பட்டவைகளின் விபரம்.

மீனிருக்கும் செய்குளத்தைப்பற்றிய சிறு புத்தகத்தில் மிருக நூல் சாஸ்திரத்தில் எழுதியிருப்பது போல், குளங்களில் இருக்கும் பிராணிகளின் ஒன்றுக்கொன்று உள்ள சம்பந்தங்களை சரியாய் எடுத்து விவரிப்பது முடியாத காரியம். இங்கே அனேக தினுசுகள் இல்லை. ஏனெனில் சென்னைக் கடல்களில் அகப்படுகிறதில்லை. சிலவேளை அகப்பட்டாலும் அவைகளை உயிரோடு கரைக்குக்கொண்டு வெரக்கூடவில்லை. அவ்வாறு கொண்டுவந்தாலும், குளங்களில் விடப்பட்டபொழுது அவைகளை காப்பாற்றுவது கஷ்டமாயிருக்கிறது. அதிக சுறு சுறுப்பும், மென்மையுமான கவலை (Sardine) கானாங்கெளுத்தி (Markerel) என்னும் மீன் வகைராக்கள் விசாலமாயில்லாத இடங்களில் அடைத்துவைத்தால் அதிக நாள் பிழைத்திருப்பது கஷ்டம். குளங்களில் மீன்களை ஒழுங்குபட வைப்பதற்கு வேறொரு கஷ்டம் என்னவென்றால் சில மீன்களுக்குள், ஒன்றோ டொன்று காட்டிக்கொள்ளும் பகைமையே. மனிதர்களைப்போலவே மீன்களுக்குள்ளும், ஒன்றை மற்றொன்று கொன்று தின்னும் குணம் அதிக விர்த்தியாயிருக்கிறது. அனேக மீன்கள் கொஞ்சமும் கூசாமல் அதேசாதி மீன்களையே பட்சணம் செய்கின்றன. வேறு சில மீன்கள் மற்ற மீன்களுக்கு இடையூறு செய்துக்கொண் டேயிருக்கும் ; வேறு மீன்களை தொந்தரைசெய்து அவைகளோடு மோதிக்கொண்டிராவிட்டால் அவைகளுக்கு சந்தோஷமிராது. வேறு சில மீன்கள், தங்கள் வகுப்பு மீன்கள் அல்லது அவைக்குச் சம்பந்தமான வேறு வகுப்பு மீன்களோடு போராடுவதிலேயே ஆனந்தப்படுகின்றன. ஒவ்வொரு குளத்திலும் ஒத்து வாழும் மீன்களை வைப்பதைத் தெரிந்து கொள்ள, பற்பலவித மீன்களின் பலவித மாய் மாறுபடும் குணங்களை நன்றாய்ப்பழகி அனுபோகப்படவேண்டியிருக்கிறது. சிலவேளைகளில் ஒருவகையைச் சேர்ந்த மீன்களை தனித்தனி வைக்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் ஒன்றாய் விட்டால் ஒன்றோடொன்று சண்டையிட்டு கொன்றுவிடுகின்றன. இதினாலேயே அடியில் வரும் குறிப்புகள் மிருக சாஸ்திர விதிப்படி கண்டிப்பாய் முறைப்படுத்தி எழுதப்பட முடியாது.

இப்புத்தகத்தில் காணப்படும் படங்கள் எல்லாம் மா-௱-௱-ஸ்ரீ M. ராமசாமி நாயுடு, பி. ஏ. அவர்களாலும் மா-௱-௱-ஸ்ரீ K. R. சாமு வேல் அவர்களாலும் வெகு சாமர்த்தியமாக எழுதப்பட்ட நவீனசித்திரங்களிலிருந்து எடுக்கப்பட்டன.