பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளி மயங்கியல் mங்க உ - ம். எல்லாக்குறியவும்;- சிறியவும், தீயவும், பெரியவும் எனவும்: எல்லாக்குறிய ரூம்;- சிறியரும், தீயரும், பெரியரும் எனவும் ஒட்டுக. இனி உரையிற்கோடல் என்பதனால், இறுதி உம்மின்றி எல்லாக்குறிய, எல்லா ருங்குறியர் எனவும் வரும், பேசல் இலேசிற்கூறிகின்ற வல்லெழுத்தினோடு மெல்லெழுத்துவகுத்தமையின், இஃது அல்வழியாயிற்று, உயர் திணை யாயி னுருபிய னிலையும். இது, மேலதற்கு உயர் நிணை முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்,-- உயர்திணையாயின் உருபு இயல் நிலையும் - அவ்வெல்லாமென்பது அஃறி ணைப்பெயராயன்றி உயர்திணைப்பெயராய் நின்ற நிலைமையாயின் உருபுபுணர்ச்சியின் இயல்பிலே நின்று ஆண்டுக்கூறிய நம்முச்சாரியை பெற்று முடியும். வற்றுவகுத்த செய்கை மேல் வகுத்தமையின், மகரக்கேடு கொன்ச, இறுதி உம்மை சும் அச்செய்கை மேலே வகுத்தமையிற் கொள்க. உ-ம். எல்லா கங்கையும்; செவியும், தலையும், புறமும் என வரும். மேல் “மானமில்லை" (சூத்திரம்-அ) என்றதனால், அல்வழிக்கண் வன்கணத்து மகரம் கெட்டு வல்லெழுத்து மிக்கு இறுதி உம்முப்பெற்று முடிதலும், இயல்புகணத்துக் கண் மகரம் கெட்டு இறுதி உம்முப்பெற்று முடிதலும் கொள்க, எல்லாக்கொல்லரும்; மணியகாரர்? சேவகரும், தச்சரும், புலவரும் எனவும் : எல்லாஞாயிறும் ;- நாயகரும், மணியகாரரும், உணிகரும், அரசரும் எனவும் வரும். நும்மெ னொரு பெயர் மெல்லெழுத்து மிகுமே. இதுவும், அவ்வீற்று விரவுப்பெயருள் ஒன் நற்கு வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள் :~ நும் என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகும் - இம் என்ற சொல்லப் படுகின்ற ஓர் விரவப்பெயர் வேற்றுமைக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியும். உ. - ம், நுங்கை ;-செவி, தலை; புரம் என வரும், மகிரம் “தார” (சூத்திரம் - கரு) என்ற இலேசினாற் கெட்டது, 'ஒரு பெயர்' என்றதனான்,ஞசர நகரங்கள் வந்த இடத்தும் அவ்வொற்றுமிகுதல் கொள்க. துஞ்ஞாண், இந்நூல் என வரும். 'ஒன் றினமுடித்தல்' என்பதனால், உக்கை என உம் என்பதன் முடியும் இவ்வீத் ஈகக் கொள்க. (சுய) அல்ல தன் மருங்கிற் சொல்லுங் காலை உக்கெட நின்ற மெய்வபி னீவர இஇடை நிலைஇ யீறுகெட ரகாம் சிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே அப்பான் மொழிவயி னியற்கை யாகும். இது, மேலதற்கு அல்வழி முடிபுகூறுதல் சாலிற்று,