பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - நூன்மரபு இ-ன் :-- நீட்டம் வேண்டின்-நீண்டமாத்திரையையுடைய அளபெடை எழுத் துப்பெற வேண்டின், அ அளபு உடைய கட்டி எழூஉதல்-மேற்கடறிய இரண்ட புடைய நெடிலையும் ஓர் அளபுடைய குறிலையும் (பிளவுபடாமற்)கூட்டி யெழூஉக, என்மனார் புலவர் என்று சொல்லுவர் புலவர். எ. கண்ணிமை நொடியென வவ்வே மாத்திரை அண்ணிதி னுணர்ந்தோர் கண்ட வாறே. இஃது, அம்மாத் திரையிலக்கணம் கூறுதல் நுதலிற்று, இ-ன் :--கண்ணிமை என நொடி என அவ் மாத்திரை-கண்ணிமையும் சொடி யு மாகிய அவை மாத்திரைக்கு அளபு, தண்ணி தின் உணர்ந்தோர் கண்ட ஆ(இழி) நுண்ணிதாக நூலிலக்கணத்தினை உணர்ந்த ஆசிரியர் கண்ட செறி, இமையென்றது இமைத்தற்றொழிலை, நொடியென்றது நொடியிற்பிறர். இசையை, தன் குறிப்பு இன்றி நிகழ்தலின், இமை முன்கூறப்பட்டது. நிறுத் தளத்தல், பெய்தளத்தல், ஈட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்கமுகந்தளத்தில், , சார்த்தியளத்தல், எண்ணியளத்தல் என எழுவகைய என்னும் அளவினுள், இது! சார்த் தியளத்தல். நுண்ணிதினுணர்ந்தோர் கண்டவாறு' என்றதனான்,நாலுழக்குக் கொண்டது நாழியென்றாற்போல, அவ்வளவைக்கு அளவை பெறாமை அறிக. (எ) - அ. ஔகார விறலாய்ப் பன்னீ ரெழுத்து முயிரென மொழிப. இது, மேற்கூறிய குறிலையும் நெடிலையும் தொகுத்து வேறு ஓர் குறியிடுதல் நுதலிற்று, இ-ள் :-ஒளகார இறுவாய் பன்னீர் ஏழுத்தும்-ஔகாரமாகிய இறுதியையு டைய பன்னிரண்டு எழுத்தினையும், உயிர் என மொழிப உயிரென்னும் குறியினை புடைய என்று சொல்லுவர். னகார விறுவாய்ப் பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப, இது, மேற்கூறிய உயிரல்லா எழுத்திற்கு ஓர் குறியிடுதல் முதலிற்று. இ-ள் :-- னகார இறுவாய் பதினெண் எழுத்தும் னகரமாகிய இறுதியையு டைய பதினெட்டு எழுத்தினையும், மெய் என மொழிப மெய்யென்னும் குறியினையு டைய என்று சொல்லுவர். 0. மெய்யோ டியையினு முயிரிய றிரியா, இஃது, உயிர்மெய்க்கு அளபு கூறுதல் அதலிற்று, இ-ள் !--மெய்யோடு இயையினும்-(உயிர்மெய்யாவன) மெய்களோடு உயிர் இயையப்பிறந்த சிலைமையவாயினும், உயிரியல் திரியா-(அவ்வுயிர்மெய்கள்' அவ்லி யைபின் கண்ணே வேறு ஓர் எழுத்தாய் நின்றமையின், மெய்யோடு இயைபின்றி வின்ற) உயிர்களது இயல்பில் திரியா. உயிரும் மெய்யும் கூடுகின்ற உயிர்மெய்க் கூட்டத்தினை, ' மெய்யோடியையி னும் ' என உயிர்மேல்வைத்துக் கூறியது, அவ்வுயிரின் மாத்திரையே இதற்குமாக் திரையாகக் கூறுகின் றமை நோக்கிப்போலும், இயலென்றது பெரும்பான்மை