________________
42 தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ன் :- வல்லெழுத்து என்ப-வல்லெழுத்து என்னும் குறிய என் று சொல் அவர், 5 சட த ப ற-க ச ட த ப ற என்னும் தனிமெய்களை. வல்லென்று இசைத்தலானும், வல் என்ற தலைவளியாற் பிறத்தலானும் வல்லெழுத்து எனப்பட்டது. மொழிக்கு முதலாமெழுத்து நான்கு உளவாகலா னும், அவற்றால் வழக்குப்பயிற்சி பெரிதாகலாலும் .(வல்லினம்) முன்கூறப்பட் டது. (கசடதபற எனனும் தனிமெய்கள் க் ச்ட்த் ப் ற்.) உய, மெல்லெழுத் தென்ப க ஞ ண ந மன. இதுவும் அது, இ-ள் :--மெல்லெழுத்து என்ப - மெல்லெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர், க ஞ ண ந ம ன ங ஞ ண ந ம ன என்னும் தனிமெய்களை, மெல்லென்று இசைத்தலானும், மெல் என்ற மூக்கின் வளியாற் பிறத்தலா லும், மெல்லெழுத்து எனப்பட்டன. மொழிக்கு முதலாமெழுத்து மூன்று உளவாகலானும் அவற்றின் வழக்குப்பயிற்சியாலும் (மெல்லினம்), முதலா மெழுத்துச் சிறுபான்மை வழக்கினவாய் இரண்டாகிய இடையினத்தின் முன் வைக் கப்பட்டது. வன்மை மென்மை கூறலின், எழுத்து அருவன்றி உருவாதல் பெறப் பட்டது. உயிருக்கும் குறுமை பெருமை கூறலின்,உருவென்பது பெறுதும். (உய) (ங ஞ ண ந மன என்னும் தனிமெய்கள் ங் ஞ் ண்ர்ம்ன் .) உக. இடையெழுத் தென்ப யரலவழள, இதுவும் அது. இ-ள் :- இடைடயெழுத்து என்ப - இடையெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர், ய ர ல வ ழ ள-ய ர ல வ ழ ள என்னும் தனிமெய்களை. இடைநிகரவாகி ஒலித்தலானும், இடைரிகர்த்தாய கிடற்றுவளியாற் பிறத்த லாலும் இடையெழுத்து எனப்பட்டது. (ய - ல வ ழ ள என்னும் தனிமெய்கள் ய் ர் ல் வ்ழ்ள் . உ.உ, அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின் மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை , இது, தனிமெய் மயக்கத்திற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்து தல் நுதலிற்று, இ-ள் :--அ மூ ஆறும்-மேற்சொல்லப்பட்ட (மூவா று) பதினெட்டு மெய்யும், வழங்கு இயல் மருங்கின் - தம்மை மொழிப்படுத்தி வழங்கும் இயல்பு உளதாகிட த்து, மெய்மயக்கு-மெய் மயக்கம் என்றும், .டன் லை-உடனிலை மயக்கம் என்றும் இருவகைய, தெரியும் காலை-(அலை மயங்கு முறைமை) ஆகாயும் காலத்து, உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன்றனையும் உறழ்ச்சியகையான் உறழ ஒன்பது உளவாமன்றே, அவற்றுள் தனிமெய்யோடு தனிமெய் மயக்கம் ஒன்றே கூறிய தென்னெனின், மற்றவற்றிற்கு வரையறை யின்மையின், வரையறை யுடைய தனிமெய்மயக்கமே கூறியொழிந்தார் என உணர்க. மெய் என் றதனால், தனிமெய்யோடு உயிர்மெய் மயக்கமன்றி, தனிமெய்யோடு தனிமெய் மயக்கமாதல் கொள்க: