பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - நான்மரபு எனவரும், 'மெய்க்கிலைச்சுட்டின்' என்றதனால், 'தம்முற்றாம்வரும்' என்றது மெய்ம்முன்னர் மெய்யென்னும் மாத்திசையன்றி உடனிலைமெய் மேலதாம் என் பதுகொள்க. எல்லாம்' என்றது, மேல் ய ர ழ என்ற அதிகாரம் மாற்றிவந்து நின்ற து. கூ.க. அ இ உ.அம் மூன்றுஞ் சுட்டு, இ-ன்:-அ இ உ அமூன்றும் சுட்டு-(குற்றெழுத்து என்னப்பட்ட) அ இ உ என்னும் அம்மூன்றும் சுட்டு என்னும் குறியவாம். உ-ம். அங்ஙனம், இங்கனம், உங்கனம் என வரும். கூஉ ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. இ-ன் :---- ஏ ஓ அமூன்றும் வினா-(மேல் நெட்டெழுத்து என்னப்பட்ட) ஆ ஏ ஓ என்னும் அம்மூன்றும் வினா என்னும் குறியவாம். உ-ம், உண்கா, உண்கே, உண்கோ சாத்தா எனவரும். தன்னின முடித்தல்” என்பதனால், எகாரமும் யகர ஆகாரமும் வினாப் பெறு மெனக்கொள்க. இக்குறிகளையும் முன்குறிலென்றும் நெடிலென்றும் கூறியவழியே கூறுகவெனின், இவை சொல் நிலைமையிற்பெறும் குறியாகலின், ஆண்டு வையாது மொழிமரபினைச் சாரவைத்தார் என்க, இக்குறி மொழிகிலைமைக்கேல் எழுத்தின் மேல் வைத்துக் கூறியது என்னையெனின், இவ்வதிகாரத்துப் பெயர் வினையல்லன வற்றிற்குக் கருவிசெய்யாமையின் என்க. (கூட) கூட, அளபிறந் துயிர்த்தலு மொற்றிசை நீடலும் உளவென மொழிப விசையொடு சிவணிய நரம்பின் மறைய வென் மனார் புலவர். இஃது, எழுத்துக்கள் முற்கூறிய மாத்திரையின் நீண்டுவிற்கும் இடம் இது வென்பது உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்;- அளபு இறந்து உயிர்த்தலும்-(உயிரெழுத்துக்களெல்லாம்) தமக்குச் சொன்ன அளவினைக் கடந்து ஒலித்தலையும், ஒற்று இசை நீடலும் ஒற்றெழுத்துக் கள் தம்மொலி முன் கூறிய அளபின் கடலையும், இசையொடு சிவணிய நரம்பின் மறைய-(இந் நூலுட்கூறும் விபரீயின் கண்ணேயன்றிக்) குரல் முதலிய ஏழிசை யோடு பொருந்திய நரம்பினையுடைய யாழினது இசை கற்கண்ணும், உள என மொழிப என்மனார் புலவர்-உள எனச்சொல்லுவர் அவ்விசை நூலாசிரியர் என்று சொல்லுவர் புலவர். ஒற்றிசை நீடலும் என்றனர், அளபிறந்துயிர்த்த லென்றது அதிகாரத்தால் நின்ற உயிர்மேற்சேறலின். உன வென்றது அந்நீட்டிப்பு ஒரு தலையன் றென்பது விளக்கிற்று. இசைநூலாசிரியரும் முதனூலாசிரியர் தாமே யெனினும், 'மொழிப் என வேறொருவர்போலக் கூறியது, அதுவும் வேறு ஒரு நூலாகச் செய்யப்படும் நிலைமைநோக்கிப் போலும், 'மறையும்' என்பதன் உம்மை விகாரத்தால் தொக் கது, அகரம் செய்யுள் விகாரம், முதலாவது நூன்மரபு முற்றிற்று