பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நான்காவது - புணரியல் இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், மொழிகள், (மேற் செய்கை யோத் துக்களுள்) புணர்தற்குரிய கருவியின் இயல்பு கூறினமையின் புணரியல் எனப்பட் டது. மேல் மொழிமரபிற் கூறிய மொழிகள் புணருமாறு உணர்த்தினமையின் மொழிமரபினோடு இயைபுடைத் தாயிற்று. ச. மூன்று தலை யிட்ட முப்பதிற் றெழுத்தின் இரண்டு தலை விட்ட முதலா கிருபஃ தறுகான் கீறொடு தெறிகின் றியலும் எல்லா மொழிக்கு மிறுதியு முதலும் மெய்யே யுபிரென் றாய் ரியல, இத்தலைச் சூத்திரம் என் நுதலிற்றோ வெனின், மொழிமாபினுள் முதலும் ஈறும் கூறிய வழி உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் என மூன்றாய் விரித்து பின்ற தனை உயிரும் மெய்யும் என இரண்டாகத் தொகுத்தலானும், அவ்வழி இருபத்திரண்டு எழுத்து மொழிக்கு முதல், இருபத்து நான்கு எழுத்து மொழிக்கு ஈறு எனக்கூற வின், முப்பத்து மூன்று எனப்பட்ட எழுத்து நாற்பத்தாறு ஆவனபோல விரித் ததனை அவ வயெல்லாம் முப்பத்து மூன்றினுள்ளனவே எனத் தொகுத்தலானும் விரிந்தது தொகுத்தல் நுதலிற்று. இ-ள் :--மூன்று தலை இட்ட முப்பதிற்று எழுத்தின் -மூன் றனை முடிவிலே யிடப்பட்ட முப்பதாகிய எழுத்தினுள், இண்டு தலை இட்ட முதல் கு இருபஃது. அவ்விரண்டினை முடிவிலே யிடப்பட்ட மொழிக்கு முதலாய இருபதும், அறு நான்கு ஈறொடு நெறி நின்று இயலும்- இருபத்துநான்கு ஈற்றொடு வழக்குதெறிக் கண் நின்று நடக்கும், எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்-மூவகை மொழிக்கும் ஈறும் முதலுமாவன, மெய் உயிர் என்று அ ஈர் இயல-மெய்யும் உயிருமாகிய அவ்வி ரண்டு இயல்பினையுடைய. உ-ம். மரம், இலை, ஆல், விள என மெய்யும் உயிரும், முதலும் ஈறும் ஆயின. இருபத்திரண்டு எழுந்து முதலாவன பன்னி. ண்டு உயிரும் ஒன்பது உயிர் மெய்யும் மொழிமுதற் குற்றியலுக மும் என இவை. இருபத்து நான்கு எழுத்து ஈறா வன பன்னிரண்டு உயிரும் பதினொரு புள்ளியும் ஈற்றுக்குற்றிய லுகரமும் என இவை. > ஈற்றொடு ' என்பது (' ஈறொரு ' என) விகாரத்தாற்றொக்கது மெய் முற் கூறிய வதனால், சொல் வகைப்புணர்ச்சியும் மெய்க்கண் நிகழுமாறு உயிர்க்கண் நிகழா தென்பது கொள்க. ('என்று' என்பது எண்ணிடைச்சொல்.) பாடு. அவற்றுள் // மெய்யீ றெல்லாம் புள்ளியோடு அலையல், இது, (மேற்கூறியவாற்றான் தனிமெய்யும் முதலாவான் சென்றதனை விலக்க லின்,) எய்தியது விலக்கல் 3 தலிற்று.