பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதாரணம்:- பொருளதிகாரம் - புறத்திணையியல் "கொலையானாக் கூற்றே கொடிதே கொழுநன் தலையானா டையலாள் கண்டே- மூலையான் முயங்கினாள் வாண்முகமுஞ் சேர்த்தினா காங்கே உயங்கினா ளோங்கிற் றுயிர்." [வெண்பா -காஞ்-க௩] பேர் இசை மாய்ந்த மகனை சுற்றிய சுற்றம் மாய்ந்த பூசல் மயக்கமும் பெரிய இசையையுடையனாய் மாய்ந்தவனைச் சுற்றிய சுற்றத்தார் அவன் மாய்த்தமைக்கு அழுத மயக்கமும். [மகன் -ஆண்மகன்.] உதாரணம் "மீலுண் கொக்கின் றூவி யன்ன வானரைக் கூந்தன் முதியோள் சிறுவன் களிறெறிந்து பட்டன னென்னு முவசை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் நோன் கழையலமரும் வெதிரத்து வான்பெய றூங்கிய சிதரினும் பலவே" (புறம் - உஎஎ) தாம் எய்திய தாங்கு அரும் பையுளும்-சிறைப்பட்டார் தாம் உற்ற பொறுத் தற்கு அரிய துன்பத்தினைக் கூறுங் கூற்றும். உதாரணம்:- "குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும் ஆளன் றென்று வாளிற் றப்பார் தொடர்ப்படு ஞமலியி னிடர்ப்படுத் திரீஇய கள் கேளல் கேளிர் வேளாண் சிறுபதம் மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியக் தாமிரந் துண்ணு மனவை ஈன்ம ரோவிவ் வுலகத் தானே."[புறம்- எச] கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும் - கணவனொடு இறந்த செலவை நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும். உதாரணம்:-- ஒருயி ராக வுணர்க வுடன் கலந்தார்க் கீருயி ரென்பரிடைதெரியார் - போரில் விடனேந்தும் வேலோற்கும் வெள்வளையி னாட்கும் உடனே யுலந்த துயிர்." [வெண்பா-சிறப்பிற்பொதுவியல்-கூ] நனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலையும்-மிகுதி மிக்க சுரத்திடைக் கணவனை யிழந்து தனியளாய்த் தலைமகள் வருந்திய முதுபாலையும். உநாரணம்:- 66 ஐயேர் வெனின்யான் புவியஞ் சுவலே எடுத்தனன் கொளிகைன் மார்பெடுக்கல்லேன் என்போற் பெருவிதிர்ப் புறுக நின்னை