பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் உச. ஏனோர் மருங்கினு மெண்ணுங் காலை - ஆனா வகைய திணைநிலைப் பெயரே. இது குறிஞ்சி முதலாய திணைக்கண் வரும் திணை நிலைப்பெயர் உணர்த்துதல் நுதலிற்று. இ-ar!--ஏனேர் மருங்கிலும் என்னும் காலை-எனை இலத்துள்ள மக்கண்மாட்டும் ஆராஃங் காலத்து, ஆன் அவகைய திணை நிலைப்பெயர்- அவ்விடத்து அவ்வகைய திணை நிலைப்பெயர், என்றது, திணைதொறும் குலப்பெயரும் தொழிற்பெயரும் கிழவர் பெயரும் வரும் - என் றலாறு. ஆன் என்பது அஸ்விடம்; அ என்னும் சுட்டு நீண்டிசைத்தது. அவை வரு மாறு :-- குறிஞ்சிக்கு மக்கட்பெயர், கு.ம:ன் குறத்தி என்பன: தலைமக்கட்பெயர், மலை நாடன் வெற்பன் என்பன. பாலைக்கு மக்கட்பெயர், எயினர் எயிற்றியர் என்பன: தலைமக்கட் பெயர், மீளி விடலை என்பன, மருதத்திற்கு மக்கட்பெயர், உழவர் உழக் தியர் என்பன; தலைமக்கட்பெயர் ஊரன் மகிழ்கன் என்பன. நெய்தற்கு மக்கட்பெயர், நுளையர் நுளைச்சியர் என்பன: தலைமக்கட்பெயர் சேர்ப்பன் துறைவன் கொண்கன் என்பன. பிறவும் அன்ன. (ஏகாரம் ஈற்றசை.) கைக்கிளை முதலா” (அகம்-க) என்னும் சூத்திரம் முதலாக இத்துணையும் கூறப் பட்டது, படுவணைத்தினை லெக்கானும் காலத்தானும் கருப்பொருளானும் உரிப் பொருளாலும் நிலமக்களாலும் தலைாக்களாலும் வரும் எனவும், அவை இலக்கணதெறி யானும் வழக்குநெறியாலும் வரும் எனவும், கைக்கிளை பெருக் திணை உரிப்பொருளான் வரும் எனவும், அகத்தினை ஏழிற்கும் இலக்கணம் ஓதியவாறு. உதாரணம்: முல்லைத்திணைகீதச் செய்யுள் :-- “ முல்லை வைந்நுனை தோன்ற வில்லமொடு பைங்காற் கொன்றை மென் பணி யலிழ இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரலவ லடைய விரலை தெறிப்ப மலர்ந்த நாலம் புலம்புபுறக் கொடுப்பக் கருவி வானங் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெறு கானம் குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரிய பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுற லஞ்சி - மணிகா வார்த்த மாண்வினைத் தேரின் உதுக்காண் டோன் றுங் குறும்பொறை நாடன் கறங்கிசை விழவி னுறத்தைக் குணாது நெடும்பெருங் குன் றத்து மன்ற காந்தட் போதவி ழலரி நாறும் ஆய்தொடி யரிவைரின் மாணலம் படர்ந்தே .” (அகம்-ச) இதனுள், முல்லைக் குரித்தாகிய நிலமும் காலமும் கருப்பொருளும், இருத்தலாகிய உரிப் பொருளும் வந்தவாறு கண்டு கொள்க.. .