பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் மூன்றன் பகுதியானும் மண்டிலத்தருமையானும் தோன்றல் சான்ற மாற்றோர் எனக் கூட்டுக. பாசறைப் புலம்பல் என்பது, பாசறைக்கண் தலைமகன் தனிமையுரைத்தல் என்ற Üஉ வறு. தூதிடை வகையினானும், வேத்தற்கு உற்றுழியினானும், மாற்றோர் மேன்மை யினானும் பாசறைக்கட் புலம்பல் எனக்கூட்டுக. அஃதாவது, துதினும் வேந்தற்குற்றுழி யினும் பகை தணிவினையிலும் பாசறைக்கட் புலம்பல் உளதாகும் எனக்கொள்க. உதாரணம்:--- "வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளைகளைத் தொழித்த கொழுந்தி னன்ன களைபிணி யவிழாச் சுரிமுகிழ்ப் பகன்றை சிதரலந் துவலை தூவலின் மலருந் தை இ நின்ற தண்பெயற் கடைநாள் அயங்குகதிர் கரந்த வாடை வைகறை விசும்புரி வதுபோல் வியலிடத் தொழுகி மங்குன் மாமழை தென்புலம் படரும் பனியிருங் கங்குலுந் தமிய ணீந்தித் தன்னூ ரோளே நன்னுதல் யாமே கடிமதிற் கதவம் பாய்தலிற் றொடிபிளந்து நுதிமுக மழுங்கிய மண்ணைவெண் கோட்டுச் சிறுகண் யானை நெடுௗ வொண்மணி கழிபிணிக் கறைத்தோற் பொழிகணை யுதைப்பத் தழங்குகுரன் முரசமொடு மயங்கும் யாமத்துக் கழித்துறைச் செறியா வாளுடை யெறுழ்த்தோள் இரவுத்துயின் மடிந்த தானை உரவுச்சின வேந்தன் பாசறை யோமே." (அகம் -உச] இது வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் கூற்று. 3 "வைகுபுலர் விடியல மைபுலம் பரக்கக் கருகனை யவிழ்ந்த ஆழுறு முருக்கின் எரிமருள் பூஞ்சினை யிளைச்சித ரார்ப்ப நெடுநெ டைக்கிய கழனியேர் புகுத்துக் குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர அரிகால் போழ்ந்த தெரிபகட்டுழவர் ஓதைத் தெள்விழி புலந்தொறும் பரப்பக் கோழிண ரெதிரிய மரத்த கவிளிக்க காடணி கொண்ட காண்டகு பொழுதின் நாம்பிரி புலம்பி னலஞ்செலச் சாஅய் நம்பிரி பறியர் நல்னொடு சிறந்த நற்றோ ணெகிழ வருந்தினள் கொல்லோ