பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் கெடுக சிந்தை கடிதிவ டுணிவே மூதின் மகளி ராத றகுமே மேனா ளுற்ற செருவிற் கிவடன்னை யானை யெறிந்து களத்தொழிந் தனனே; நெருக லுற்ற செருவிற் கிவள்கொழுநன் பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே; இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று முயங்கி வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப் பாறுமயிர்க் குடுமி யெண்ணெய் நீவி ஒருமக னல்ல தில்லோள் செருமுக நோக்கிச் செல்சென விடுமே. (புறம்-உஎகூ.) இவற்றுள் ஆண்பால் பற்றிவந்ததனை இல்லாண்முல்லை யெனவும், பெண்பால் பற்றிவந்தனை மூதின் முல்லை யெனவும் கூறுப. 'கொற்றவை நிலை' என்றதனானே, குறிஞ்சித்திணைக்கு முருகவேளேயன்றிக் கொற்றவையும் தெய்வ மென்பது பெற்றாம். உதாரணம்:- 66 ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக் கூளி மலிபடைக் கொற்றவை - மீளி அரண்முருங்க வாகோள் கருதி னடையார் முரண்முருங்கத் தான் முந் துறும்.' (வெண்பா-வெட்சி-உய] கூகூ. வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளு முறுபகை வேந்திடை தெரிதல் வேண்டி யேந்துபுகழ்ப் போந்தை வேம்பே யாரென வரூஉ மாபெருந் தானையர் மலைந்த பூவும் வாடா வள்ளி வயவ ரேத்திய ஓடாக் கழனிலை யுளப்பட வோடா உடல்வேந் தடுக்கிய வுன்ன நிலையும் மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் ஆரம ரோட்டலு மாபெயர்த்துத் தருதலுஞ் சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தலும் தலைத்தா ணெடுமொழி தன்னொடு புணர்த்தலும் மனைக்குரி மாபினது கரந்தை யன்றியும் வருதார் தாங்கள் வாள்வாய்த்துக் கவிழ்தலென் றிருவகைப் பட்ட பிள்ளை நிலையும் வாண்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க