பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் கால்கிளர்ந் தன்ன மதழ்பரிப் புரவிக் கரும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி புலவரைத் தோன்றல் யாவது சினப்போர் நிலவரை நிறீஇய நல்லிசைத் தொலையாக் கற்பநின் றெம்முனை யானே." [பதிற்று-அய] குன்கு சிறப்பின் கொற்றவள்ளையும் குறையுறுதலைச் செய்யாத வென்றிச் சிறப்பினையுடைய கொற்றவள்ளையும். கொற்றவள்ளை - தோற்ற சொற்றவன் அளிக்கும் திறை, உதாரணம் வந்துழிக் காண்க. அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ- மாற்றார்விடுபடைக்கவன் முதலி யனவற்றைத் தம்மாட்டுத் தடுத்து உளன் அழிந்தோர்ப் பேணித் தழுவிக்கோடலொடு தொகுத்து எண்ணின், உதாரணம்:-- ', "வருகத்தில் வல்லே வருகதில் வல்லென வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப நூலரி மாலை சூடிக் காலிற் றயென் வந்த மூதி லாளன் அருஞ்சமந் தாங்கி முன்னின் றெறிந்த ஒருகை யிரும்பிணத் தெயிறுமிறை யாகத் திரிந்த வாய்வா டிருத்தாத் தனக்கிரிந் தானைப் பெயர்புற நகுமே."[புறம் - உஅச] இத்துணையும் கூறப்பட்டது வஞ்சி, உரவரு மடலரு மறிவுதெரிந் தெண்ணி அறிந்தனை யருளா ராயின் யாரிவு ணெடுந்தகை வாழு மோரே" (பதிற்று-ஏக] என்பதும் இதன்கண் அடங்கும். இது முதுமொழிவஞ்சி. கழி பெருஞ் சிறப்பின் பதின்மூன்று துறை-மிகப் பெருஞ் சிறப்பையுடைய பதின்மூன்று துறைத்தாம். வென்றோர் விளக்கம் முதலிய மூன்று மொழிந்த நுளைய வெல்லாம் இரு திறத்தி னர்க்கும் பொதுவாக நிற்றலின் கழிபெருஞ்சிறப்பெனக் கூறினார். இன்னும் "கழிபெருஞ்சிறப்பின்" என்றமையின், பேரரசர் துணையாக வந்த குறுநில மன்னரும் தாமும் பொலிவெய்திப் பாசறைநிலை உரைத்தலும் பிறவும் கொள்க. இவையற்றியன துணைவஞ்சி. "நீயே புறவி னல்லல்” (புறம்-சசு] "வள்ளியோர்ப்படர்ந்து" (புறம்-சள]< என்னும் புறப்பாட்டுக்களில் காண்க. பிறவும் அன்ன. (@) கூகூ. உழிஞை தானே மருதத்துப் புறனே முழுமுத லரண முற்றலுங் கோடலும் அனைநெறி மரபிற் றாகு மென்ப. இஃது, உழிஞைத்திணை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.