பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் இ-ள்:- வாகை பாலையது புறன்-வாகைத்திணை பாலை என்னும் அகத்திணையினது புறனாம்; தாவில் கொள்கை தத்தம் கூற்றை பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப - அது கேடில்லாத கோட்பாட்டினையுடைய தத்தமக்குள்ள இயல்பை வேறுபட மிகுதிப்படுத் தல் என்பர். அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், பாலையாவது தனக்கென ஒரு நில மின்றி எல்லா நிலத்தினும் காலம் பற்றிப் பிறப்பதுபோல, இதுவும் எல்லா நிலத்தி னும் எல்லாக்குலத்தினும் காலம்பற்றி நிகழ்வதாதலினானும், ஒத்தார் இருவர் புணர்ச்சி யினின்றும் புகழ்ச்சிகாரணமாகப் பிரிமாறுபோலத் தன்னோடு ஒத்தாரினின்றும் நீங் கிப் புகழப்படுதலானும் அதற்கிது புறனாயிற்று. அஃது ஆமாறு வருகின்ற சூத்தி ரங்களாலும் விளங்கும். (யரு) எசு. அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபி னரசர் பக்கமும் இருமூன்று மரபி னேனோர் பக்கமும் மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியி னாற்றிய வறிவன் றேயமும் காலிரு வழக்கிற் றாபதப் பக்கமும் பாலறி மரபிற் பொருநர் கண்ணும் அனைநிலை வகையோ டாங்கெழு வகையால் தொகைநிலை பெற்ற தென்மனார் புலவர். இது, வாகைத்திணை பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று. பார்ப்பனப் பக்கம் முதலாகப் பொருநர் பக்கம் ஈறாகச் சொல்லப்பட்ட அத்தன் மைத்தாகிய நிலைலகையோடே ஏழ்வகையால் தொகை நிலைபெற்றது [வாகைத்திணை]. எனவே தொசைநிலை பல வென்பது பெறுதும். இ-ள்:- அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும் - ஆறு திறனாசிய அந்தணர் பக்கமும். அறுவகைப்பட்ட பக்கம் எனக் கூட்டுக. அவையாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன. இவ்வொழுக்கத்தால் மிகுதல் வாகையாம் என்பது, பார்ப்பனப் பக்கமும் என்றதனான் அப்பொருளின் மிகுதி கூறலும் இதன்பாற் படும். இது மேல்வருவனவற்றிற்கும் ஒக்கும். ஓதலாவது கல்வி. இதல்வருமாறு:- "இம்மை பயக்குமா லீயக் குறைவின்றால் தம்மை விளக்குமாற் றாமுளராக் கேடின்றால் எம்மை யுலகத்தும் யாங்காணேங் கல்விபோல் மம்ம இறுக்கு மருந்து." [நாலடி - கல்வி-2] இது கல்வியின் விழுப்பம் கூறிற்று. Jடு N (2 ஆற்றவுங் கற்றா நறிவுடையா ரஃதுடையார் நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை யந்நாடு