பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஅ தொல்காப்பியம் - இளம்பூரணம். பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில் வலிய லாகுநின் றாடோய் தடக்கை புலவுநாற் றத்த பைந்தடி பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது பிறிதுதொழி லறியா வாகலி னன்று மெல்லிய பெரும தாமே நல்லவர்க் காரணங் காகிய மார்பிற் பொருநர்க் கிருநிலத் தன்ன நோன்மைச் செருமிகு சேளய்நிற் பாடுநர் கையே." [புறம்-கச) குடியோம்புதல் வருமாறு "இருமுந்நீர்க் குட்டமும் வியன்ஞாலத் தகலமும் வளிவழங்கு திசையும் வறிதுநிலைஇய காயமும் என்றாங்கு, அவையளந் தறியினு மளத்தற் கரியை அறிவு மீரமும் பெருங்க ணோட்டமுஞ் சோறுபடுக்குந் தீயொடு செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது பிறிதுதெற லறியார்கின் னிழல்வாழ் வோரே திருவி லல்லது கொலைவில் லறியார் காஞ்சி லல்லது படையு மறியார் திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப் பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது பகையிருண்ணா வருமண் ணினையே அம்புதுஞ்சுங் கடியரணால் அறந்துஞ்சுஞ் செங்கோலையே! புதுப்புள் வரினும் பழம்புட் போகிலும் விதுப்புற வறியா வேமக் காப்பினை அனையை யாகன் மாறே மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே." [புறம் - ய] 'பக்கம்' என்றதனான் அரசரைப்பற்றி வருவனவற்றிற்கெல்லாம் இதுவே ஒத்தா கக்கொள்க. இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் - ஆறு மரபினையுடைய வணிகர் வேளாளர் பக்கமும். வணிகர்க்குரிய ஆறு பக்க மாவன :- ஓதல், வேட்டல், ஈதல், உழவு,வாணிசும், கிரையோம்பல்.