பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/10

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருளதிகாரம் - களவியல்

பாச

"ஒருபாற் கிளவி யேனைப்பாற் கண்ணும்

வருவகை தானே வழக்கென மொழிப.” [பொருளியல்-உஎ]


என்பதனானும், இந் நூல் உலகவழக்கே நோக்குதலானும் அவர் பலவகைப்படுவர். அஃதாமாறு அந்தணர் அரசர் வணிகர் வினைஞர் என்னும் நால்வரொடும் அநுலோமர் அறுவரையும் கூட்டப் பதின்மராவார். இவரை நால்வகை நிலத்தோடு உறழ நாற்பதின்மராவர்.1 இவரையும் அவ்வந்நிலத்திற் குரிய ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னுந் தொடக்கத்தாரோடு கூட்டப் பலராவர். அவரையும் உயிர்ப்பன்மையான் நோக்க வரம்பிலராவர்.(௳)

{{left_margin|3em|கூக. சிறந்துழி யையஞ் சிறந்த தென்ப
 விழிந்துழி யிழிவே சுட்ட லான.

  என்—னின்: ஐயம் நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.
 ஒருவன் ஒருத்தியைக் கண்ணுற்றுழி அவ்விருவகையும் உயர்வுடையராயின் அவ்விடத்து ஐயம் சிறந்தது என்று சொல்லுவர். அவர் இழிபுடையராயின், அவ்விடத்து அவள் (இழி) பினையே சுட்டி யுணர் தலான் என்றவாறு, - சிறப்பு என்பது மிகுதி, ஐயமிகுதலாவது மக்களுள்ளாள் அல்லள் தெய்வமோ என மேலாயினாரோடே ஐயுறுதல். சிறந்துழி என்பதற்குத் தலைமகள் தான் சிறந்துழியும் கொள்ளப்படும்; அவளைக் கண்டவிடம் ஐயப்படுதற்குச் சிறந்துழியும் கொள்ளப்படும்; உருவமிகுதியுடையளாதலின் ஆயத்தாரிடைக் காணினும் தெய்வம் என்று ஐயறுதல். இதனாற் சொல்லியது உலகத்துத் தலைமகனும் தலைமக ளுமாக நம்மால் வேண்டப்பட்டார் அந்தணர் முதலாகிய நான்கு வருணத்தினும் ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னும் தொடக்கத்திலும் அக்குலத்தாராகிய குறுநில மன்னர் மாட்டும் உளராவான்றே; அவரெல்லாரினும் செல்வத்தானும் குலத்தானும் வடிவா னும் உயர்ந்த தலைமகனும் தலைமகளு (மாயினோர்) மாட்டே ஐயம் நிகழ்வது. அல்லாதார் மாட்டும் அவ் விழிமரபினையே சுட்டியுணராகிற்குமாதலான் என்றவாறு, 

காராரப் பெய்த

என்னும் முல்லைக் கலியுள் (கலித்-௱௯)

{{left_margin|3em|"மண்ணித் தமர்தந் தொருபுறந் தைஇய
கண்ணி யெடுக்கல்லாக் கோடேக் தகலல்குல் '
புண்ணிலார் புண்ணாக நோக்கு முழுமெய்யுங்
கண்ண ளோ வாயர் மகள்.

}}}}</poem>

என ஐயமின்றிச் சுட்டியுணர்ந்தவாறு காண்க.

இனி உயர்புள்வழி ஐயம் நிகழுமாறு:

உயர் மொழிக் கிளவி யுறழுங் கிளவி -- - யையக் கிளவி யாடூஉவிற் குரித்தே

(பொருளியல்-ச௩)

என்றாராகலின், ஐயப்படுவான் தலைமகன் என்று கொள்க. தலைமகள் ஐயப்படாத தென்னையெனின், அவள் ஐயப்படுங்கால் தெய்வமோ வென்று ஐயுறல் வேண்டும். அவ்வாறு ஐயுற்றால் அச்சம் வரும். அது ஏதுவாகக் காம நிழ்ச்சி யுண்டாகாது. (௩)

௬௨. வண்டே யிழையே வள்ளி பூவே
 கண்ணே யலமர லிமைப்பே யச்சமென்
றன்னவை பிறவு மாங்க ணிகழ

நின்றவை களையுங் கருவி யென்ப.

என்--னின், ஜயப்பட்டான் துணிதற்குக் கருவி உணர்த்துதல் நுதலிற்று.

எண்ணப்பட்ட வண்டு முதலாகிய எட்டும் பிறவுமாகி அவ்விடத்து. நிகழாநின்ற ஐயம் களையும் கருவி என்றவாறு.


1. ‘இவ்ரொடும்’ என்பது பிரதி. 2. 'பிறவுமாம்' என்றிருத்தல் வேண்டும்.