பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/14

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருளதிகாரம் - களவியல்

சவ

நெர்

எனவே, வேட்கையுற்றுழியும் அச்சத்தானாதல் நாணானாதல் மடத்தானாதல் புணர்ச்சிக்கு இசையாது நின்று வரைந்தெய்தல் வேண்டுமென்பது போந்தது. இவ்வாறு இருவரும் உள்ளப்புணர்ச்சியால்நின்று வரைந்தெய்தி மெய்யுறும். இதற்குச் செய்யுள்:--

"தீம்பால் கறந்த சலமாற்றிக் கன்றெல்லாந்
 தாம்பிற் பிணித்து மனைற் றீஇ யாய்தந்த
பூங்கரை நீலம் புடைதாழ மெய்யசைஇப் பாங்கரு
முல்லையும் தாய பாட்டங்காற் றோழிநம்
புல்லின(த் தாயர்) மகளிரோ டெல்லா
மொருங்கு விளையாட வவ்வழி வந்த
குருந்தம்பூங் கண்ணிப் பொதுவன்மற் றென்னை
முற்றிழை யேஎர் மடநல்லாய் நீயாடுஞ்
சிற்றில் புனைகோ சிறிதென்றா னெல்லாம்
பெற்றேம்யா மென்று பிறர் செய்த லில்லிருப்பாய்
கற்ற திலைமன்ற காணென்றேன் முற்றிழாய்
தாது சூழ் கூந்த 1.றகை பெறத் தைஇய
கோதை புனைகோ நினக்கென்றா னெல்லாநீ
ஏதிலார் தந்தபூக் கொள்வாய் நனிமிகப்
பேதையை மன்ற பெரிதென்றேன் மாதரா
றைய பிதிர்ந்த சுணங்கணி மென்முலைமேற்
றொய்ய லெழுதுகோ மற்றென் றான் யாம்பிறர்
செய்புற நோக்கி யிருத்துமோ நீபெரிது
மையலை மரதோ விடுவென்றேன் றையலாய்
சொல்லிய வாறெல்லா மாறுமா 2றியான் பெயர்ப்ப
வல்லாந்தான் போலப் பெயர்ந்தா னவனைநீ
யாயர் மகளி ரியல்புரைத் தெந்தையும்
யாயு மறிய வுரைத் தீயின் யானுற்ற
நோயுங் களை குவை மன்.” (கலித்-மாகக)

இது தலைமகள் உள்ளப்புணர்ச்சியின் உரிமைபூண்டிருந்தவாறும் வரைந்தெய்தக் கூறலுற்றவாறும் காண்க. (அ)

கூஎ. வேட்கை யொருதலை யுள்ளுதன் மெலித லாக்கஞ் செப்ப னாணுவரை பிறத்த னோக்குவ வெல்லா மவையே போறன் மறத்தன் மயக்கஞ் சாக்கா டென்றிச் சிறப்புடை மரபினவை களவென மொழிப.

என் -னின், மெய்யுறுபுணர்ச்சி நிகழுங்காலம் உணர்த்துதல் நுதலிற்று.

மேல்,

 “பெருமையு முரனு மாஉே மேன.”

எனவம்,

{{centre-

"143 அச்சமும் நாணு மடலை முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய வென்ப.”

}}


(பிரதி)- 1, ‘நகை பெருத்கை இய'. 2. 'றியான் பெயா'. 3. 'அச்சமு நாணும் பெண்பாலன'.