பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அசு தொல்காப்பியம் - இளம்பூரணம் என்றாற் போலக் கொள்க. 'தெரிய' என்னும் செயவெனெச்சம் ஏதுப்பொருண் மை குறித்துநின்றது. பெய்ப்பாடு எட்டாவது:-நகை, அழுசை, உலகை, இளிவரல், அச்சம், பெருமிதம், மருட்கை, வெகுளி: இவற்றின்பகுதி மெய்ப்பாட்டியலுட் சாண்க. இம் மெய்ப்பாடு உறுப்புடையது போலச் சொல்லப்பட்ட நெஞ்சின்கட் புலப்பட என் றவாஜ் சொல்லா மரபி எவற்றெடு கெழீஇச் செய்யா மரபிற் றெழிற்படுத் தடக்கி யும் என்பது - சொல்லாத பர பினையுடையவற்றொடு கெழுமி யவை செய்யாத மரபை யாண்டுப் படுத்தி யவற்றையும் நெஞ்சினைப்போல அடக்கியும் என் றவாறு. சொல்லா மரபின வாவன -- புள்ளும், மாவும், மரனும், கடலும், கானலும் முதலா யின செய்யா மரபாவன -- தூதாச் சேதலும் வருதலும் உளபோலக்கூறும் அவை போல் வனவும் பிறவும். அவரவ ருறுபிணி தமபோற் போற்றியும் என்பது---பாவர்சிலர் யாதொரு பிணியுற்றார் அவருற்ற பிணியைத் தாமுற்ற பிணிபோலச் சேர்த்தியும் என்றவாறு. 'அவரவர்' என்பது உயர் இணயாய்க் கூறினும் இருதிணையுங் கொள்ளப்படும்: ஒருபாற் கிளவி யேனைப்பாற் கண்ணும் - வருவகை தானே வழக்சென மொழிப” (பொருளியல் - உஎ என்பதனால். அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இரு பெயர் மூன்று மரியவாக வுவம் வாயிற் படுத்தலும் உவமம் ஒன்றிடத்து என்பது--அறிவையம் அறியப்படும் பொருளையம் வேறுபட நிறுத்தி இருவகைப்பட்ட பெயரும் மூவகைப்பட்ட பொருட்கும் உரித்தாக உவமம் பொருந்து மிடத்து. 2.வாவாயிற் படுத்தலும் என்றவாறு, வேறுபட நிறுத்தலாவது--தத்தம் நிலைமை யொழியவென் றவாறு. இருபெயரா வது- உவமைப்பெயரும் உவமிக்கும் பெயரும். மூன்றும் உரியவாகும் என்பது- தொழி அம் பண்பும் பயனும். 'உவமம் ஒன் றிடத்து' என்றதனை மொழிமாற்றுக. இருவர்க்கும் உரியபாற் கிளவி என்பது--தலைமகற்கும் -தலைமகட்கும் உரிய வொரு கூற்றக் கிளவி என் றவாறு. அவற்றுள் நெஞ்சொடுபுணர்த்தற்கு உதாரணம்:--- கைகவியாச் சென்று கண் புதையாக் குறுதிப் பிடிக்கை யன்ன பின்னகர் தீண்டித் தன் தொடிக்கை தைலரத் தோய்த்தன்று கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாணுத் லந் தீங் கிளவிக் குறுமகள் மென்றோள் பெறநசைஇச் சென் றவென் னெஞ்சே.” (அகம்-க] என்பது உறுப்புடையது போல உவகைபற்றி வந்தது. சென்றது கொல் போந்தது சொல் செவ்வி பெறுந் துணையும் நின்றதுகொ னேர்மருங்கிற் கையூன்றி - முன்றின் முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற் குழர் துபின் சென் றவென் னெஞ்சு.” (முத்தொள்ளாயிரம்)