பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - பொருளியல் நாங் வினைவயிற் (பிரிவும்) பிரியுங் காலத்தினும் தலைவியைப் பாராட்டிப் பிரிதலினால், அப் பாராட்டினான் மெய்பெறவுணரும் என் நவாறு. உதாரணம்: - “நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந் தா மஞ்சிய தாங்கே யணங்காகு மென்னுஞ்சொ லின் றீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட யானு மிதுவொன் றுடைத்தென வெண்ணி” (கலித் - உ.ச) என் றமையாற் பாராட்டினால் தலைமகன் பிரிவு உணர்ந்தவாறு அறிக. உாஉகூ. கற்புவழிப் பட்டவள் பரத்தையை யேத்தினு முள்ளத் தூட லுண்டென மொழிப. என்-னின்", இதுவு மது. கற்புக் காரணமாகத் தலைமகனது பரத்தைமைக் குடன் பட்டாளே யாயினும், உள்ளத்தின்கண் ஊடல் நிகழும் என்றவாறு. (கள்) உளஈய. கிழவோள் பிறள் குண மிவையெனக் கூறிக் கிழவோன் குறிப்பினை யுணர்தற்கு முரி:பள். என்-னின், இது தலைமகட் குரிய தோர் இலக்கணமுணர்த்துதல் நுதலிற்று. தலைவி மற்ருெருத்தி குணம் இத்தன்மையள் எனச்சொல்லித் தலைமகன் குமிப் . பினை யறிதற்கு முரியள் என்றவாறு. இது கற்பியலுட் கூறியதற் திலக்கணம். கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே யொள்ளிழை யுயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினவு வோளே." (ஐங்குறு . உ ) என வரும். பிறவு மன்ன. உாகக. தம்முறு விழுமம் பரத்தையர் கூறினு மெய்ம்மை யாக வவர்வயி னுணர்ந்துத் தலைத்தாட் கழற்றம் மெதிர்ப்பொழு தின்றே மலிதலு மூடலு மவையலங் கடையே. என்.னின், இது தலைமகட்குரிய தோர் மரபுணர்த்திற்று. பரத்தையர் தாமுற்ற துன்பத்தியாத் தலைமகட்குக் கூறிய வழியும் அவரிடத்துத் துன்பத்தை மெம்ய்மையாக உணர்ந்துவைத்துத் தலைமகன் மாட்டுக் கழறுதல் தலைவன் திர்ப்பட்ட பொழுது இல்லை, மகிழ்ச்சியும் புலவியும் அல்லாத காலத்து என்றவாறு, கூறிலும் என்ற உம்மை எதிர்மறை. உறாமை பெரும்பான்மை. அதனை ஐயப்