௱௫௨
தொல்காப்பியம் - இளம்பூரணம்
பொய் பாராட்ட லாவது—தலைவியின் ஐம்பால் முதலிய கடைகுழன்று சிதைவின்றேனும் அஃதுற்றதாக மருங்குசென்று தொட்டான் ஓர்காரணம் பொய்யாகப்படைத்து உரைத்துப் பாராட்டல்.
“கடல்புக் குயிர்கொன்று வாழ்வர்நின் னைய
ருடல்புக் குயிர்கொன்று வாழ்வைமன் னீயு
மிடல்புக் கடங்காத வெம்முலையோ பார
மிடர்புக் கிடுகு மிடையிழவல் கண்டாய்.” [சிலப்.கானல் – ௰௭]
இடம்பெற்றுத் தழாஅ லாவது — பொய்பாராட்டல் காரணமாத் தலைவிமாட்டு அணிமையிடம் பெற்றுத் தழுவக்கூறல். உதாரணம்:
“கொல்யானை வெண்மருப்புங் கொல்வல் புலியதளு
நல்யாணர் நின்னையர் கூட்டுண்டு — செல்வார்தா
மோரம்பி னாலெய்து போக்குவர்யான் போகாமை
யீரம்பி னாலெய்தா யின்று.” [திணைமாலை –௨௨]
இடையூறு கிளத்த லாவது—நாண்மடன் நிலைக்களனாக் கொண்ட தலைவி தன் அறிவு நலன் இழந்து ஒன்றும் அறியாது உயிர்த்தனள். அஃது ஒக்குமோ எனின், ஒக்கும். புதிதாய்ப்புக்கார், ஊற்றுணர்வு என்றும்பயிலாத தம் மெல்லியன்மெய்யிற் பட அறிவிழப்பினும் உள் நெக்கு உயிர்க்கும் என்க. அதுபற்றிப் புலையன் தொடு தீம்பால் போல் காதல்கூரக் கொம்பானும் கொடியானும் சார்ந்தாளைத் தலைவன் இப்பொழுது இவ்வூற்றின்பிறகு இடையூராய் நின்மனத்தகத்து நிகழ்ந்தவை யாவென வினவுதலும்.
நீடுநினைந்திரங்க லாவது—இருவர் இயலும் ஒருங்கு இணைந்தும், தலைவி பெருநாணால், பால்வழி உறுகவென எண்ணி மாற்றமுங் குறியுங் காட்டாது கண்புதைப்பாளைத் தலைவன் புறமோச்சி நிற்கவும் ஆண்டும் கலக்கலாம் பொழுது கூடாமைக்கு நினைந்து இரங்கல்.
கூடுதலுறுத லாவது—இங்ஙனமாய்க் காட்சி நிகழ்வின் பின்னர்ப் புணர்ச்சி எய்தலும்.
இதுவரை இயற்கைப்புணர்ச்சியாம் காரணங்கூறி, கூடுதலுறுதலால் மெய்யுறுபுணர்ச்சி கூறினார். இவற்றிற்குச் செய்யுள்:
“வீழு மிருவர்க் கினிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.” [குறள்–௲௱௮]
இது கூடுலுறுதல். பிற வந்துழிக்காண்க.
சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழி என்பது—இயற்கைப் புணர்ச்சிக்குக் களனாக மேற்கூறப்பட்டவற்றுடன் அவ்வின்பந் திளைத்தலையும் விரைவாக ஒன்றாப் பெற்ற விடத்து.
இத்தெய்வப் புணர்ச்சிக்குப் பொருள் கூறுங்கால், பயிறல், பாராட்டல், தழாஅல், கிளத்தல், இரங்கல், உறுதல், நுகர்ச்சி, தேற்றம் என்று சொல்லப்பட்ட இருநான்கு கிளவியும் என எண்ணப்படுத்துக.
“மெய்தொட்டுப் பயிறல்” முதலாக் “கூடுத லுறுதல்” வரை இயற்கைப் புணர்ச்சிக்கே உரிய கூறி,
“சொல்லிய நுகர்ச்சி” முதல் “இருநான்கு கிளவி” வரை இடந்தலைப்பாடும் சேர்த்து உணர்த்தினார். அற்றாயின் நுகர்ச்சியும் தேற்றமும் இயற்கைப் புணர்ச்சியன்றோ இடந்-
(பிரதி)— 1. ‘அனிமையிடம்’. 2. ‘உண்நொக்கு’.