பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/22

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருளதிகாரம் - களவியல்

௱௫௫


“இடிக்குங் கேளிர் நுங்குறையாக
 நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
 ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
 கையி லூமன் கண்ணிற் காக்கும்
 வெண்ணெ யுணங்கல் போலப்

 பரந்தன் றிந்நோய் நொண்டுகொளற் கரிதே.” [குறுந்- ௫அ]

இது நிகழ்பவை உரைத்தது.

1.குற்றங்காட்டியவாயிலாவது- தலைவன் மாட்டுச் சோர்வானும் காதல்மிகுதியானும் நேர்வுற்ற பழிபாவங்களை எடுத்துக்காட்டும் பாங்கன்.

பெட்பினும் - அத்தகைய பாங்கன் இவ்வியல் பண்டைப்பால்வழியது என எண்ணி இவ்வாறு தலைமகன் மறுத்தவழி அதற் குடன்படல். அவ்வழி, நின்னாற் காணப்பட்டாள் எவ்விடத்தாள்? எத்தன்மையாள்? எனப் பாங்கன் வினாவுதலும், அதற்குத் தலைமகன் இடமும் உருவுங் கூறுதலும், அவ்வழிப் பாங்கன் சென்று காண்டலும், மீண்டு தலைமகற்கு. அவள் நிலைமை கூறலு மெல்லாம் உளவாம். அவ்வழிப் பாங்கன் வினாதலும் தலை மகன் உரைத்தனவும் உளவாம். பாங்கன் வினாயதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டு கொள்க. அவ்வழித் தலைமகன் உரைத்தற்குச் செய்யுள்:--

“எலுவ கிறாஅ ரேமமுறு நண்ப
 புலம் தோழ கேலா யத்தை
 மாக்கட னடுவ னெண்ணாட் பக்கத்துப்
 பசுவெண் டிங்க டோன்றி யாங்குக்
 கதுப்பயல் விளக்குத் திருநுதல்
 புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே” [குறுந் - ௱௨க]

“கழைபா டிரங்கப் பல்லியங் கறங்க
வாடுமக ணடந்த கொடும்புரி நோன்கயிற்
றதவத் தீங்கனி யன்ன செம்முகத்
துயவுத்தலை மந்தி வன்பறழ் தூங்கக்
2கழைக்க ணிரும்பொறை யேறி விசைத்தெழுந்து
குறக்குறு மாக்க டாலங் 3கொட்டுமக்
குன்றகத் ததுவே கொழுமிளைச் சீறூர்
சீறூ ரோளே நாறுமயிர்க் கொடிச்சி
கொடிச்சி கையகத் ததுவேபிறர்

விடுத்தற் காகாது பிணித்தவென் னெஞ்சே”. [நற்றிணை - ௯௫]

இன்னும் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் வரைந்தெய்தல் வேண்டிக் கூறினவுங் கொள்க.


    “முலையே முகிழ்முகிழ்த் தனவே தலையே
    கிளை இய குரல கிழக்குவீழ்ந் தனவே
    4செறிநிறை வெண்பலும் பறிமுறை நிரம்பின
    சுணங்குஞ் சிலதோன் றினவே 5யணங்குதற்


(பிரதி)--1. இது தொடங்கி ‘பண்டைப் பால் வழியது என எண்ணித்’ என்பது முடியவுள்ளது (த.மு.செர்.). 2. பறைக்க ணிரும்பொறை யேறி நின்று. 3. கொட்டுங் 4. செறிமுறை, 5. யணங்கென தா.