எருஅ தொல்காப்பியம் - இளம்பூரணம்
யுறக் கூறல் என்றது- தோழி கூற்றுள் . - அருமையி னகற்சி யென்று ஓதப்பட்டது. தண்டாதிரத்த லாவது- தலைமகன் பலகாலுஞ் சென்று இரத்தல். .. மற்றையவழிஎன்பது - பின்வரலென்றல் முதலாயின. சொல்லவட்சார்த்தலிற் புல்லியவகைஎன்பது--முன்னுறு புணர்ச்சி முறைநிறுத் துணர்த்தலென ஓதப்பட்டது. அறிந்தோளாயிர்ப்- பென்பது-பேதைமை பூட்டல் என் ஓகப்பட்டது. கேடு கூறுதலாவது-உலகுரைத்தொழிப்பினும் என ஓதப்பட்டது. கேடு கூறுதலாவது--- பெருமையிற் பெயர்ப்பினும் என ஓதப்பட்டது. நீக்கலினாகிய நிலைமை என்பது-- அஞ்சி யச்சுறுத்த லெனஓதப்பட்டது. இவையெல்லாம் தோழி கூற்றினுட் காணப்படும்.
தோழியைக் குறையுறும் பகுதிவருமாறு;--
தோளுங் கூந்தலும் பலபாராட்டி
வாழ்த லொல்லுமோ மற்றே செக்கோற்
குட்டுவன் றொண்டி யன்னவெற்
கண்டு மயங்கி நல்காக் காலே"
(ஐங்குறு - எ அ)
இனி மடலேறுவல் என்பதற்குச் செய்யுள்:
"மாலென மடலு மூர்ப பூவெனக்
குவிமுகி ழெருக்கங் கண்ணியுஞ் சூடுப
மறுகி னார்க்கவும் படுப
பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே.”
(குறுந் - யஎ) -
அவ்வழித் தலைமகன் கூறிய சொற் கேட்டு, இஃது அறிவும் அருளும் நாணமு
முடையார் செய்யார் எனக் கூறியவழித் தலைமகன் கூறியதற்குச் செய்யுள்:--
"நாணொடு நல்லாண்மை பண்டுடையே னின்றுடையேன்
காமுற்றா ரேறு மடல்.”
(குறள் - தாஙங)
[எனவும்,)
'அறிவிலா ரெல்லாரு மென்றேயென் காம
மறுகின் மறுகு மருண்டு.”
(குறள் - தார்க..]
(எனவும் வரும்.) பிறவு மன்ன மடன் மா கூறாது பிறகூறியதற்குச் செய்யுள் :-
பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும்
பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவ
ளுருத்தெழு வன்முலை யொளிபெற வெழுதிய
தொய்யில் காப்போ ரறிதலு 1மறியார் ..
முறையுடை யரசன் செங்கோல் வையத்
தியான் றற் கடவின் யாங்கா வதுகொல்
பெரிதும் பேதை மன்ற
வளிதோ தானேயிவ் வழுங்க லூரே.”
(குறுந் - உ எசு)
இவ்வாறு இரந்து பின்னிற்றலும் மடலேறுவல் என்றலும் கைக்கிளை பெருந்திணைப் பாற்படுமோ எனின், அவ்வாறு வருவன அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவா மாறுவருகின்ற சூத்திரத்தான் விளங்கும்.
(W$) (பிரதி)-- 1. மறியாது -