பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருளதிகாரம் - களவியல்

பாருக

.

 பண்பிற் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினு.
        மன்புற்று நகினு மவட்பெற்று மலியினு
        மாற்றிடை யுறுதலு மவ்வினைக் கியல்பே.

 என்-னின், எய்தியது விலக்குதல் நுதலிற்று.
 
மேல் தலைமகன் -மட்ன்மா கூறு மிடனுமா ருண்டே' என்றார். இஃது அவன்

மடன்மா கூறுதற்கு நிமித்தமாகிய நீக்கத்தினை மாறுபட்டுக் கூறாத் தலைமகள் இயல்பைக் கூறிப்பெயர்ப்பினும், அஃதறிந்து தா முடன்படத் தலைமகன் வருத்தத்தினான் மெலிகின்றமை கூறிய விடத்தினும், தலைமகன் 'குறையை மறுப்புழி அன்பு தோன்ற (நக்க இடத்தும்,) தோழி உடன்பாடுற்றவழியும், தலைமகனும் மேற்சொல்லப்பட்ட மடன்மா கூறுதல் இடையூறு படுதலும் தோழியிற் கூட்டத்திற்கு இயல்பு என்றவாறு.

 உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை.
 பண்பிற் பெயர்ப்பினும் -- தலைமகள் இளமைப் பண்பு கூறிப் பெயர்த்தவழித்

தலைமகன் கூறியது. அதற்குச் செய்யுள்:-

"குன் றக் குறவன் காதன் மடமகள்
         வண்டுபடு கூந்தற் றண்டழைக் கொடிச்சி
         வளையண் முளைவா ளெயிற்ற
         ளிளைய ளாயினு மாரணங் கினளே.

(ஐங்குறு - உாடுசு)

  பரிவுற்று மெலியினும்--(பரிந்த வுள்ளத்துடன் மெலிதலுறுதலும்.) பரிவுற்றுத்

தோழி மெலிதலாவது 'உடம்படுவளியாள்' என்றாற்போல வருவது, அவ்வழித் தலைமகன் கூற்று:--

“தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு
        மாலை யுழக்குர் துயர்.”

(குறள் - தாக.டு.).

அன்புற்று நகினும்--[அன்பு தோன்றும் உள்ளத்துடன் நக்ககாலும் கூற்று நிகழும்.) அன்புற்று நக்கவழித் தலைமகன் கூறியதற்குச் செய்யுள் :---

"நயனின் மையிற் பயனிது வென்னாது
              பூம்பொறிப் பொலிந்த வழலுமி ழகன்பைப்
              பாம்புயி ரணங்கி யாங்கு மீங்கிது
              தகாஅது வாழியோ குறுமக"ணகாஅ
              துரைமதி யுடையுமென் னுள்ளஞ் சாரற்
              கொடுவிற் கானவன் கோட்டுமா தொலைச்சிப்
              பச்சூன் பெய்த பகழி போலச் -
              சேயரி பரந்த வாயிழை மழைக்க
              2ணுறாஅ நோக்க முற்றவென்
              பைத னெஞ்ச முய்யு மாறே.”

(நற்றிணை - எடு]

 அவட் பெற்று மலியினும்-தோழி உடம்பாட்டினைப் பெற்று மகிழல். இரட்டுற

மொழிதலான். தலைமகளை இருவகைக்குறியினும். பெற்றுமதிழினும் என்றும் கொள்க. உதாரணம்;-


(பிரதி)- 1. மாயிதழ். - 2. இது தொடங்கி - இது அவட் பெற்று மலியுந் தலை கூற்று' என்பது. முடியவுள்ளது (த. மு. சொ.)