பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/36

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பொருளதிகாரம் - களவியல்

௱௬௯


னாயித ழுண்கண் பசப்பத் தடமென்றோள்

சாயினு மேஎ ருடைத்து.” [கலித் -௱௰௨]

என உடம்பாடு கூறினாளாதலின் முற்கூறியது அல்லகூற் றாயிற்று. (௨௰)

௱௬. மறைந்தவற் காண்ட றற்காட் டுறுத
னிறைந்த காதலிற் சொல்லெதிர் மழுங்கல்
வழிபாடு மறுத்தன் மறுத்தெதிர் கோடல்
பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்
கைப்பட்டுக் கலங்கினும் நாணுமிக வரினு
மிட்டுப்பிரி விரங்கினு மருமைசெய் தயர்ப்பினும்
வந்தவழி யெள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினு
நொந்துதெளி வொழிப்பினு மச்ச நீடினும்
பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும்
வருந் தொழிற் கருமை வாயில் கூறினுங்
கூறிய வாயில் கொள்ளாக் காலையும்
மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு
நினைத்தல் சான்ற வருமறை யுயிர்த்தலு
முயிராக் காலத் துயிர்த்தலு முயிர்செல
வேற்றுவரைவு வரினது மாற்றுதற் கண்ணும்
நெறிப்படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்
பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி
யொருமைக் கேண்மையி னுறுகுறை தெளிந்தோ
ளருமை சான்ற நாலிரண்டு வகையிற்
பெருமை சான்ற வியல்பின் கண்ணும்
பொய்தலை யடுத்த மடலின் கண்ணுங்
கையறு தோழி கண்ணீர் துடைப்பினும்
வெறியாட் டிடத்து வெருவின் கண்ணுங்
குறியி னொப்புமை மருடற் கண்ணும்
வரைவுதலை வரினுங் களவறி வுறினுந்
தமர்தற் காத்த காரண மருங்கினுந்
தன்குறி தள்ளிய தெருளாக் காலை
வந்தவன் பெயர்ந்த வறுங்கள நோக்கித்
தன்பிழைப் பாகத் தழீஇத் தேறலும்
வழுவின்று நிலைஇய வியற்படு பொருளினும்
பொழுது மாறும் புரைவ தன்மையி
னழிவுதலை வந்த சிந்தைக் கண்ணுங்
காமஞ் சிறப்பினு மவனளி சிறப்பினு
மேமஞ் சான்ற வுவகைக் கண்ணுந்
தன்வயி னுரிமையு மவன்வயிற் பரத்தையு

மன்னவு முளவே யோரிடத் தான.

22