பக்கம்:1933 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-களவு கற்பு பொருள்-வ. உ. சி.pdf/39

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

௱௭௨

தொல்காப்பியம் - இளம்பூரணம்

அவற்றுட் கைப்பட்டுக் கலங்கிய தற்குச் செய்யுள்:—

‘கொடியவுங் கோட்டவும்' என்னுங் குறிஞ்சிக்கலியுள்,

நரந்தா றிருங்கூந்த லெஞ்சாது நனிபற்றிப் பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை நலம்பெறச் சுற்றிய குரலமை யொருகாழ் தொன்முறை சுற்றி மோக்கலு மோந்தன னறா அவவிழ்ந் தன்னவென் மெல்விரற் போதுகொண்டு செறாஅச் செங்கண் புதைய வைத்துப் பறாஅக் குருகி னுயிர்த்தலு முயிர்த்தனன் றொய்யி லிளமுலை யினிது தைவந்து தொய்யலந் தடக்கையின் வீழ்பிடிக் களிக்கு மையல் யானையின் மருட்டலு மருட்டினன்;

அதனால்,

அல்லல் களைந்தனன் றோழி நந்நக ரருங்கடி நீவாமை கூறி [னன்றெ]ன நின்னொடு சூழ்வ றோழி நயம்பரிந் தின்னது செய்தா ளிவளென மன்னா வுலகத்து மன்னுவது புரைமே.” [கலித் - ௫௪]

இதனுட் கைப்பட்டுக் கலங்கியவாறும் அருமறை யுயிர்த்தவாறும் இவ்வாறு செய்யாக்கால் இறந்துபடுவன் என்னும் குறிப்பினளாய் 'மன்னாவுலகத்து மன்னுவது புரையும்' எனவும் கூறியவாறு காண்க.

நாணுமிக வந்ததற்குச் செய்யுள்:—

"நோக்குங்கால் நோக்கித் தொழூஉம்பிறர் காண்பராத் தூக்கிலி தூற்றும் பழியெனக் கைகவித்துப் போக்குங்காற் போக்கு நினைத்திருக்கு மற்றுநாங் காக்கு மிடமன் றினி; எல்லா வெவன்செய்வாம் நாம்.” [கலித் - ௬௩]

இது நாணம் மிக்கவழித் தோழியொடு உலாவியது. இட்டுப்பிரிவிரங்கியதற்குச் செய்யுள்;—

அம்ம வாழி தோழி காதலர். பாவை யன்னவென் னாய்கவின் றொலைய நன்மா மேனி பசப்பச் செல்வே மென்பதம் மலைகெழு நாட்டே [ஐங்குறு - உஉக]

எனவரும்.

அருமை செய்தயர்த்தற்குச் செய்யுள்:— “நெய்தற் புறவி னிறைகழித் தண்சேர்ப்பன் கைதைசூழ் கானலுட் கண்டநாட் போலானாற். செய்த குறிவழியும் பொய்யாயி னாயிழாய் யையகொ லான்றார் தொடர்பு.” [திணைமொழி - ௪க]

என வரும்.